மெல்லிய வெள்ளி நிறைத்திலான தோற்றம் 40 களில் ஈர்க்க கூடியது என்றாலும், இளம் வயதில் முன்கூட்டியே தலைமுடி நரைப்பது என்பது கவலை அளிக்கும் ஓன்றுதான். இதைச் சமாளிக்க ரசாயன டைகளை நாடுவதைவிட, இயற்கையான கீழ்கண்ட வீட்டு வைத்திய குறிப்புகளைப் பின் பற்றி பாருங்கள்
1. மருதாணி:
விழா மற்றும் சிறப்பு நாட்களில் மருதாணி பூசிக்கொள்வது கூந்தல் தோற்றத்தை பொலிவாக்குவதோடு, முடி நரைக்கும் பிரச்சனையையும் கட்டுப்படுத்தும். மருதாணி அடிப்படையிலான டையை ஒரு கோப்பை தண்ணீரில் கலந்து இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் கருப்பு தேயிலை இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து சில நிமிடங்கள் ஊற வைக்கவும். (அதிக நேரம் ஊறி விடக்கூடாது). அதன் பிறகு ஆற வைக்கவும். மருதாணி பசையை தேயிலைகள் மீது ஊற்றவும். தேவை எனில் எலுமிச்சை சாற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். இந்தக் கலவையை நன்றாக கலக்கி குழைவாக்கி கொள்ளவும்.
இந்தப் பசையை, ஹேர் அப்பிளிகேட்டர் உதவியுடன் உங்கள் கூந்தலில் பூசிக்கொள்ளவும். அனைத்து வெள்ளை முடிகள் மீதும் இந்தக் கலைவை படிய வேண்டும். ஒரு அரைமணி நேரம் இப்படியே இருந்துவிட்டு, இதமான தண்ணீரில் நன்றாக அலசவும். சிறந்த பலன் பெற சல்பேட் இல்லாத ஷாம்புவுக்கு மாறவும். மாதம் ஒரு முறை இவ்வாறு செய்து வரவும். அதன் பின் இதன் மாய தோற்றத்தை நீங்களே உணரத்துவங்குவீர்கள்.
2. கறிவேப்பிலை:
கரிவேப்பிலை விரைவான மற்றும் நல்ல பலன் தரக்கூடிய உத்தி. கறிவேப்பிலை வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, கால்சியம், இரும்புசத்து மற்றும் தாமிரம் உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிடென்ட் நிறைந்து இருப்பதால், நரை தன்மையை தடுப்பதோடு, கூந்தலுக்கு பட்டு போன்ற மென்மையான தன்மையை அளிக்கும். கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயில் போட்டு நன்றாக சூடாக்கவும். கருப்பாக கசடு சேரத்துவங்கும் வரை சூடாக்கவும். பின்னர் இதை தனியே எடுத்து ஆற வைக்கவும். நன்றாக ஆறிய பிறகு இந்த எண்ணெயால் கூந்தலில் அடி முதல் நுனி வரை நன்றாக தடவவும். ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் கழித்து, சல்பேட் இல்லாத ஷாம்புவால் நன்றாக கூந்தலை அலசவும். வாரம் இருமுறை அல்லது மூன்று முறை மேற்கொள்ளலாம்.
3. காஃபி:
கேபைன் நமக்கு ஊக்கம் அளிக்க கூடிய சிறந்த உளவியல் மருந்தாக இருக்கிறது. அதே நேரத்தில் காஃபி, குறிப்பாக கருப்பு காஃபி, இளம் பருவ நரை பிரச்சனைக்கும் தீர்வு தரக்கூடியது. காஃபியை நன்றாக ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைத்து, பின்னர் அதை ஆற வைக்கவும். இந்த காஃபியை மெல்ல கூந்தலில் பரவச்செய்து விரல்களால் நன்றாக தடவவும். 20 நிமிடம் காஃபி ஊறட்டும். இது கூந்தலை தற்காலிகமாக அடர் பழுப்பு நிறம் பெற வைக்கும். பின்னர் குளிர்ந்த நீரில் கூந்தலை அலசவும். ஷாம்பு பயன்படுத்துவதை இந்த முறை தவிர்க்கவும். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை செய்தால் நல்ல பலன் பெறலாம்.
4. நெல்லி:
ஏற்கனவே உங்கள் கூந்தலுக்கு நெல்லிக்காய் சார்ந்த சில பொருட்களை நீங்கள் பயன்படுத்தியிருக்கலாம். அதில் உள்ள ஆண்டிஆக்ஸிடெண்ட் கூந்தலில் ஆரோக்கியம் மற்றும் உறுதியை காக்கிறது. நெல்லிக்காய் தூளை சூடாக்கி, தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். இந்த தூள் கருகும் வரை நன்றாக கலக்கவும். இதை ஆற வைக்கவும். இந்தக் கலவையை கூந்தலில் தடவி மெல்ல மசாஜ் செய்யவும். இரவு செய்து கொள்வது நல்லது. பின்னர் காலையில் இதமான நீரில் அலசவும்.
5. வெங்காயம்:
தலைமுடி நரைப்பதற்கு வெங்காயம் நல்ல தீர்வாகிறது. இதை தொடர்ந்து பயன்படுத்தினால் மயிர்கால்கள் நன்கு கருக்கும். வெங்காய சாற்றை எடுத்து, உச்சந்தலையில் நன்றாக தடவிக்கொள்ளவும். அரை மணி நேரம் கழித்து இதமான நீரில் அலசவும். தலைமுடி நரைக்கும் பிரச்சனையை சமாளிக்க, செயற்கையான டைகளை நாடாமல், வீட்டிலேயே செய்யக்கூடிய எளிமையான இயற்கை வழிகளை நாடலாம்.
– மு. தாமிரபரணி