பனங்கிழங்கு சத்துக்கள் நிறைந்த சிறந்த உணவாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. இதனைப் பல வழிகளில் உணவாக பயன்படுத்தலாம். கிழங்கினை நன்றாக வேகவைத்து மிளகு, உப்புத்தூள் தடவி சாப்பிடலாம். நன்றாக வெந்த பின்னர் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, மாவாக அரைத்து தேங்காய்ப்பால், வெல்லம், ஏலக்காய் சேர்த்து புட்டு செய்தும் சாப்பிடலாம். பனங்கிழங்கு மாவுடன் தண்ணீர் சேர்த்து பிசைந்து அடை செய்தும் உண்ணலாம். இதில் அதிக நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தாது உப்பு, சிறிதளவு புரதம் மற்றும் சர்க்கரை, ஒமேகா-3 கொழுப்பு நிறைந்த அமிலம், பொட்டாசியம், வைட்டமின் பி, பி1, பி3, சி ஆகியவை அதிகம் காணப்படுகின்றன.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி அரிசி மாவு & 200 கிராம்
பனங்கிழங்கு மாவு & 10 கிழங்கு
வெல்லம் & 200 கிராம்
உப்பு தேவைக்கு ஏற்ப
செய்முறை :
அரிசி மற்றும் பனைங்கிழங்கு மாவிற்கு தேவையான அளவிற்கு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும். மாவை 20 – 25 நிமிடத்திற்கு வேகவைக்கவும். வெல்லம் மற்றும் துருவிய தேங்காய் சேர்க்கவும் சூடாக பரிமாறவும்.