நாட்டுப்புற கல்யாணப் பூசணி பச்சடி

மஞ்சள் பூசணியை கிராமங்களில் கல்யாண பூசணி என்று சொல்வதுண்டு. கல்யாண பூசணியில் அல்வா மற்றும் பச்சடி செய்து அசத்துவார்கள். தை மாதத்தில் அதிகமாக மஞ்சள்பூசணி விளைவதால் அந்த மாதம் முழுவதும் வாரத்தில் ஒரு நாள் பூசணி பச்சடி கண்டிப்பாக சமைப்பார்கள்.

தேவையானவை:

மஞ்சள் பூசணி & கால் கிலோ,
மிளகாய்த்தூள் & ஒரு தேக்கரண்டி,
மல்லித்தூள் & ஒரு தேக்கரண்டி,
மஞ்சள்தூள் & கால் தேக்கரண்டி,
சின்ன வெங்காயம் & 5,
கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி & சிறிதளவு,
எண்ணெய், உப்பு & தேவையான அளவு.

செய்முறை:

மஞ்சள் பூசணியை துண்டுகளாக்கி, மஞ்சள்தூள் சேர்த்து வேக விட்டுஞ் ஒன்றிரண்டாக மசிக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கிஞ் கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் தாளிக்கவும். மசித்த பூசணியை சேர்த்து, உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்துக் கலக்கி கொதிக்கவிட்டு, நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.