உடல் எடையை குறைப்பதற்கு சரியான டயட் மற்றும் முறையான ஜிம் சென்று கடுமையான உடற்பயிற்சி செய்வது போல உடலில் சேரும் கொழுப்புகளின் அளவைத் தடுப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். அதற்காக சாப்பிடும் உணவுகளை தவிர்த்தால் விரைவில் உடல் எடை குறைந்துவிடும் என்று எண்ணக்கூடாது. சரி நீங்கள் மேற்கொள்ள வேண்டிய 5 முக்கிய உடற்பயிற்சியினை இங்கு பார்ப்போம்.
1. பிளாங்க் உடற்பயிற்சி:
குப்புற படுத்தவாறான நிலையில், கைகளை உந்தி உடலை மேலே வைத்திருக்க வேண்டும். கால்களை நிலத்தில் ஊன்றி, இடுப்பு பகுதியை மேலே உயர்த்த வேண்டும். அப்போது தலை முதல் கால் வரை உடல் கிடைமட்டமாக இருக்கவும். அந்த நிலையிலேயே 30 முதல் 40 நொடிகள் இருக்கவும்.
2. ஸ்கிப்பிங்:
தரம் குறைவான ஸ்கிப்பிங் கயிற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அது உங்களின் பயிற்சியைக் கடினமானதாக மாற்றும். நல்ல தரமான ஸ்கிப்பிங் கயிறைப் பயன்படுத்தவும். இது உங்கள் பயிற்சிக்கும் உங்களுக்கும் ஊக்கத்தைக் கொடுக்கும்.
3. ஜம்பிங் ஜாக்:
கைகளை பக்கவாட்டில் தளர்ந்த நிலையில் வைத்து நேராக நிற்க வேண்டும். கால்களை ஒன்றாக சேர்த்துவைக்கவும். இப்போது இரண்டு கால்களையும் அகட்டிக் குதித்து, அதே நேரத்தில் கைகளை தலைக்கு மேல் உயர்த்தித் தட்ட வேண்டும். பிறகு, பழையபடி குதித்து கால்களை ஒன்றுசேர்த்தபடியே, கைகளை இயல்புநிலைக்குக் கொண்டுவர வேண்டும். இதுபோன்று 20 முறை செய்ய வேண்டும். பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம்.
4. பை சைக்கிள் உடற்பயிற்சி:
அடி வயிற்று தசைகளை உறுதிப்படுத்துவதற்காக பை சைக்கிள் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
5. புஷ் அப்:
புஷ் அப் உடற்பயிற்சி செய்வது மிகவும் ஆரோக்கியமானதாகும். இதனை செய்வதால் உடல் மிகவும் வலிமையாகிறது. தினசரி வேலைகளை செய்வதற்கு தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன. உடலை திடமாகவும், தொப்பை இல்லாமலும் வைத்துக்கொள்ள இந்த உடற்பயிற்சி உதவுகிறது.