சித்த மருத்துவம் என்பது தென்னிந்திய தமிழ் மருத்துவ முறையாகும். பண்டைச் சித்தர்கள், இதனை உருவாக்கித் தந்துள்ளார்கள். சித்தர்கள் தங்கள் ஞான அறிவால் அதனை நன்குணர்ந்து மிகவும் துல்லியமாகக் கூறியுள்ளனர். சித்த மருத்துவம் எப்போது தோன்றியது என்று வரையறுக்க முடியாது. அது பாரம்பரிய மரபு முறைப்படி பரவி வந்துள்ளது. இயற்கையில் கிடைக்கக்கூடிய எண்ணற்ற புல், பூண்டு, மரம், செடி, கொடி, வேர், பட்டை, இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து முதலிய மூலிகைப் பொருட்களைக் கொண்டும்… நவரத்தினம், நவலோகங்கள், இரசம், கந்தகம், கற்பூரம், தாரம், அயம், பவளம் முதலிய தாதுப் பொருட்களைக் கொண்டும், சங்கு, பலகறை, நண்டு முதலிய சீவப் பொருட்களைக் கொண்டும்… திரிகடுகு, திரிசாதி, திரிபலை, பஸ்பம், செந்தூரம், மாத்திரை, கட்டுகள், பொடிகள், குளித்தைலங்கள், கஷாயங்கள் முதலிய பல வகைகளாக நோய்களுக்கு, நல்ல தண்ணீர், கடல் நீர், ஊற்று நீர், கிணற்று நீர் முதலிய பல நீர் வகைகளைக் கொண்டும்… பால், தேன், சர்க்கரை, நெய் முதலியன கொண்டும்… தெங்கு, புங்கு, புன்னை, வேம்பு, எள் முதலிய தாவர எண்ணெய் வகைகளைக் கொண்டும் உருவாக்கப்பட்ட ஒரு சிறந்த தமிழ் மருத்துவ முறையாகும்.
1. முகம் பளிச் ஆக இருப்பதற்கு:
ஆவாரம் பூ, கடலைமாவு இரண்டையும் சமமாக எடுத்து பசும் பாலில் அரைத்து முகத்தில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து இளம் வென்னீரில் கழுவி சுத்தமான மெல்லிய துணியால் துடைத்து எடுக்க முகம் பாலீஷ் ஆகும்.

2. ஆஸ்துமாவிற்கு :
ஊமத்தன் பூ, பூவரசன் பூ 5, ஆடா தோடை இலை 5 இவைகளை நிழலில் உலர்த்தி புகை பிடிக்க ஆஸ்துமா தணியும்.
3. விடாத விக்கலுக்கு :
பழய மாட்டுத் தோலை சுட்டு சாம்பலாக்கி 1 தேக்கரண்டி அளவு தேனுடன் சாப்பிட குணமாகும்.

4. குதிக்கால் வலிக்கு :
எருக்கன் பாலை எடுத்து அத்துடன் முட்டை வெள்ளைக் கருவை சேர்த்து பிசைந்து வலி உள்ள கால் பாகத்தில் போட்டு தேய்த்து நெருப்பு அனல் காட்ட வலி தீரும்.
5. தோலில் வெண்புள்ளி மாற :
கண்டங்கத்தரி பழம், குன்னிமுத்து இலைச்சாறு, கொடிவேலி வேர் தொலி இவைகளை ஒன்று கூட்டி அரைத்து, தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி வெண்தொலியில் போட்டு வர 40 நாட்களில் வெண் தொலி மாறிவிடும்.

6. மஞ்சள் காமாலைக்கு :
தும்பை இலை, கீழாநெல்லி இலை, கரிசலாங்கண்ணி, கோவை இலை, இசங்கு வேர் தொலி, இவைகளை சமமாக எடுத்து பால் விட்டு அரைத்து காலை மாலை மூன்று நாட்கள் சாப்பிட குணமாகும். 3 நாட்கள் உப்பு, புளி நீக்கவும்.
7. தலை பொடுகு போக :
50 கிராமம் வேப்பம் பூவை உரலில் போட்டு இடித்து, 250 மில்லி தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி தலையில் வருடி தேய்த்து வர பொட்டு, பொடுகு, ஈறு, பேன் எல்லாம் ஒழியும்.
“நல்ல தண்ணீர், கடல் நீர், ஊற்று நீர், கிணற்று நீர் முதலிய பல நீர் வகைகளைக் கொண்டும்… பால், தேன், சர்க்கரை, நெய் முதலியன கொண்டும்… தெங்கு, புங்கு, புன்னை, வேம்பு, எள் முதலிய தாவர எண்ணெய் வகைகளைக் கொண்டும் உருவாக்கப்பட்ட ஒரு சிறந்த தமிழ் மருத்துவ முறையாகும்.”
8. தலை பேன் சாக :
மருதோன்றி பூவை தேங்காய் எண்ணெய்யில் கலந்து காய்ச்சி தலைக்கு தினமும் தேய்த்து வர பேன்கள் ஒழியும்.

9. பேதியை நிறுத்த :
ஒரு துண்டு வசம்பை அரைத்து பாலுடன் கொடுத்தாலும், ஒரு மாம் பருப்பை தேனுடன் அல்லது மோருடன் கொடுத்தாலும் பேதி நிற்கும்.
10. பெண்களுக்கு மேகம் போவதை நிறுத்த :
பொடுதலை, வெள்ளைக்கரு, கௌதும்பை இவைகளை நிழலில் உலர்த்தி சமபாகம் சேர்த்து இடித்து காலை, மாலை வேளைக்கு, டீஸ்பூன் அளவு சாப்பிட மேகம் போவது நின்று விடும். அல்லது செம்பருத்தி பூ 5 எண்ணம் எடுத்து 100 மல்லி பசும்பாலில் போட்டு 5 கிராம் பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சி காலை, மாலை 3 நாட்கள் சாப்பிட மேகம் போவது நின்று விடும்.

11. விதை வீக்கத்திற்கு :
நொச்சி இலைச்சாறு, வெள்ளைப்பூண்டு அரிசி, முட்டை வெண்கரு, களச்சிகாய் நான்கையும் அரைத்து விதையில் தேய்த்து வர வீக்கம் வத்தும்.

12. வாந்தியை நிறுத்த :
சதகுப்பையை பொன் வறுவலாக வறுத்து தூள் செய்து 1 டம்ளர் தண்ணீரில் 10 கிராம் தூளை போட்டு அத்துடனம் 10 கிராம் பனங்கற்கண்டு சேர்த்து குடிக்க வாந்தி நிற்கும். அன்று மட்டும் நீர் ஆகாரம் சாப்பிடவும்.
13. கால் ஆணிக்கு மருந்து :
வசம்பு, சுட்டு எடுத்த மஞ்சள், மருதாணி இலை இவைகளை சமமாக எடுத்து மைபோல் அரைத்து கால் ஆணிகளில் கட்டிவர குணமாகும்.
14. வெட்டு காயங்களுக்கு மருந்து :
நாயுருவி இலை அல்லது அம்மான் பச்சரிசி (பாலட்டன்குளை) இலையுடன் வெள்ளைப் பூண்டு அரிசி 2ஐ சேர்த்து அரைத்து கட்டிவர காயங்கள் ஆறும்.

15. குடி போதை மறக்க :
மிளகாய்ச் செடி, இலவங்கபட்டை, சர்க்கரை, நெல்லிக்காய்தூள், கொத்தமல்லி, வாழைசாறு சேர்த்து தினீராக்கி காலை, மாலை, 100 மில்லி அளவு குடித்துவர 30 நாட்களில் பலன் கிடைக்கும்.
– எம்.பவளக்கொடி