டக்கர் திரை விமர்சனம்

டக்கர் திரை விமர்சனம்

நடிகர்கள் :  சித்தார்த், இப்தான்ஷா கௌஷிக், முனிஷ்காந்த், விக்னேஷ் காந்த், அபிமன்யு
இயக்கம்    : கார்த்திக் ஜி கிரேஷ்
இசை      : நிவாஷ் கே. பிரசன்னா
ஒளிப்பதிவு :  வாஞ்சிநாதன் முருகேஷன்
தயாரிப்பு   : பேஷன் ஸ்டுடியோ

ஏழை வீட்டில் பிறக்கும் சித்தார்த். தான் ஏழையாக இருப்பதை நினைத்து வருந்துகிறார். தன் அப்பா மீதும் அம்மா மீதும் கோபம் கொப்பளிக்கிறது. பிறக்கும்போது ஏழையாகப் பிறந்திருக்கலாம்.  சாகும்போது ஏழையாக சாக விரும்பல. அதனால், பணக்காரனாவதற்காக சென்னை புறப்படுகிறார். சென்னையில் தன் நண்பர் உதவியுடன் ஒரு அறை எடுத்து தங்குகிறார். நியாயமான முறையில் பல வேலைக்கு முயற்சிக்கிறார். ஆனால், எந்த வேலையிலும் சுயமரியாதை கிடைக்கவில்லை.

அதனால், பணக்கார டிரைவராக இருப்போம் என்று பென்ஸ் கார் ஓட்டுநராக வேலை செய்கிறார். அப்போது, ஒரு  பணக்கார பெண் மீது ஈரப்பு ஏற்படுகிறது. ஒருநாம் அந்தப் பெண்ணை தொடரும்போது ஒரு விபத்து ஏற்படுகிறது. அதற்குபின் என்ன நடந்தது? பணக்காரன் ஆனரா? காதல் கிட்டியதா? போன்ற கேள்விகளுக்கு விடையாக படம் பயணிக்கிறது.

தொடக்க கதையில் பிரமாதப்படுத்துகிற இயக்குநர். அடுத்தடுத்து கதை சொல்ல வரும்போது முன்னுக்குப் பின் முரண்பட்டு கதையை திசை திருப்புகிறார். அதனால், பார்வையாளர்களுக்கு ஒரு விதமான சோர்வு  தருகிறது. அதே நேரத்தில் நகைச்சுவை தரவேண்டும் என்பதற்காக யோகிபாபு கதாபாத்திரத்தை கதைக்குள் புகுத்தியிருக்கிறார். ஆக மொத்தத்தில் திரைக்கதையில் சொதப்பல் ஏற்படுத்தினாலும், இயக்கத்தில் வாவ் சொல்ல வைக்கிறார். குறிப்பாக, காதல் காட்சியில் அவ்வளவு இளமை கொப்பளிக்கிறது. ஆக்ஷன் காட்சியிலும் சபாஷ் போட வைக்கிறார் இயக்குநர் கார்த்திக் ஜி கிரேஷ்.

சித்தார்த் தன் பங்கிற்கு சிறப்பாக நடித்திருக்கிறார். ஆக்ஷன், சென்டிமென்ட், காதல் குறும்பு என அட்டகாசப்படுத்துகிறார். அதேமாதிரி அவ்வளவு ப்ரஷ்ஷாக இருக்கிறார். குறிப்பாக, காதல் காட்சியில் கதகளி ஆடியிருக்கிறார். அப்புறம், நாயகி இப்தன்ஷா கௌஷிக இளமை ததும்ப நடித்திருக்கிறார். எந்தப் பிரேம்மில் பார்த்தாலும் அழகாக தெரிகிறார். யோகிபாபு, விக்னேஷ்காந்த், முனிஷ்காந்த்  ஆகியோர் நகைச்சுவை பகுதியில் தங்களுடைய பங்களிபை செய்திருக்கின்றனர்.

இசை நிவாஷ் கே. பிரசன்னா. தரமான பாடல்கள் மற்றும் காட்சிகளுக்கு ஏற்ற பின்னணி இசை அமைத்து  படத்திற்கு பலம் சேர்க்கிறார். அதே மாதிரி ஒளிப்பதிவு செய்த வாஞ்சிநாதன் முருகேஷன் நெடுஞ்சாலை, இருள் மற்றும் சென்னை நகரம் என அனைத்தும் கண்களுக்கு குளிர்ச்சியூட்டும் விதத்தில் அமைத்திருக்கிறார். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் படம் டக்கராகவும் இல்லை. பெட்டராகவும் இல்லை. சுமாராக இருக்கிறது.