இந்த ஸ்வாதி ஸ்ரீ யார்?:
ஸ்வாதி ஸ்ரீ கோவையில் உள்ள குருடம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர். இவரது தந்தை கே.தியாகராஜன் ஒரு வணிகர். தாய் லட்சுமி பி.காம் பட்டதாரி. இவர், ஊட்டி மற்றும் குன்னூர் அஞ்சல் துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். ஸ்வாதி ஸ்ரீ தொடக்கக் கல்வியை ஊட்டியிலும், உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வியை குன்னூரிலும் படித்துள்ளார். தஞ்சாவூரில் உள்ள RVS அக்ரி கல்லூரியில் பி.எஸ்சி அக்ரி படித்து முடித்திருக்கிறார். ஸ்வாதியின் சகோதாரி இந்திரா, உணவு தொழில்நுட்பத்தில் பி.டெக் படித்து வருகிறார்.
கல்லூரிப் படிப்பின் போதே சிவில் சர்வீஸ் மீது ஆர்வம் வந்தது. இந்நிலையில் விவசாயம் குறித்து சென்ற பீல்டு டிரிப் ஒன்று ஸ்வாதியின் ஆர்வத்தைத் தூண்டியது. மேலும், தன் தாத்தா, பாட்டி விவசாயப் பணிகளில் ஈடுபாடுவதை நெருக்கமாகப் பார்த்த அவர், அதில் ஆராய்ச்சி செய்ய விரும்பினார். பட்டப்படிப்பு படிக்கும் போது, ஐஏஎஸ் அதிகாரியாக மாறினால் பெரிய தாக்கத்தை உருவாக்க முடியும் என்பதை உணர்ந்தார். சுவாதி இறுதியாண்டு படிக்கும் போது யுபிஎஸ்சி பற்றி ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார். நேரத்தை வீணடிக்காமல் பட்டப்படிப்பு முடிந்து சென்னைக்கு குடிபெயர்ந்த அவர், அங்கு ஆரம்பத் தயாரிப்புக்காக மனித நேயம் ஐஏஎஸ் அகாடமியில் தன்னைச் சேர்த்துக்கொண்டார். பின்னர் அறம் ஐஏஎஸ் அகாடமியில் சேர்ந்தார்.
இனி அவர் கூறியதாவது:
“மே 18 அன்று நடந்த நேர்காணல்களை முடித்த பிறகு, இந்த ஆண்டு சிறந்த தரவரிசையைப் பெறுவேன் என்று நான் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தேன். அதனால், அடுத்த தேர்வுக்கு நான் தயாராகவில்லை. எனது உடல்நிலை குறித்து கவலைப்பட்டதால், எனது குடும்பத்தினரும் தயாரிப்பை மீண்டும் தொடங்க வேண்டாம் என்று வலியுறுத்தினர். தொடர்ச்சியான தயாரிப்பு காரணமாக உடல் பலவீனமடைந்து வருகிறது” எனக் கூறியவரிடம், UPSC பயிற்சிக்கு தேர்வானது எப்படி? என்று கேட்டபோது…
“அடிப்படைகளை கற்க புத்தகங்களை மறந்தேன், தொடர்ந்து சோதனைகளை மேற்கொண்டேன். நடப்பு நிகழ்வுகள் குறித்து என்னைப் புதுப்பித்துக் கொள்ள செய்தித்தாள்களைப் படித்தேன். கேள்விகளைத் தவறாமல் தீர்த்தேன் மற்றும் தவறுகளை அடையாளம் கண்டேன். அதைச் சரிசெய்வதற்காக நான் அதைச் செய்தேன்,” என்கிறார். மதியம் 1.30 மணியளவில் வீட்டில் இருந்தபோது சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் குறித்து சுவாதிக்கு தெரியவந்தது. இந்தச் செய்தியைக் கேட்டு அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
“எனது பெற்றோர் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தனர். அவர்கள் அந்த தருணத்தை மிகவும் கொண்டாடினர்,” என்கிறார்.
“இந்தச் செய்தியைக் கேட்டபோது நாங்கள் மேகத்தில் மிதப்பது போல் உணர்ந்தோம். அதைப் பற்றி முதலில் கேள்விப்பட்டபோது எங்களால் நம்ப முடியவில்லை. கடந்த ஆண்டே அதைச் சாதிக்க விரும்பினார். முடிவுகளால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்,” என்கிறார் அவரது தாய் லட்சுமி.
தொடர்ந்து 4 ஆண்டுகள் மிகவும் தீவிரமாக தயாராகி வந்துள்ளார். இரண்டாவது முறை தேர்வெழுதி IRS பதவிக்கு தேர்ச்சி பெற்றுள்ளார். இருப்பினும் தனது கனவில் இருந்து பின் வாங்கவில்லை. தற்போது மூன்றாவது முறை தேர்வெழுதிய நிலையில் IAS ஆக தேர்ச்சி பெற்று கனவை நனவாக்கிவிட்டார்.