நடிகர்கள்: கார்த்தி, ராஷி கன்னா, ரெஜிஷா விஜயன்
இயக்கம்: பி.எஸ். மித்ரன்
இசை : ஜி.வி. பிரகாஷ்குமார்
தயரிப்பு : லஷ்மன் குமார்
1988ம் ஆண்டில் படம் துவங்குகிறது. ராணுவ உளவாளி வழி மாறிப் போனதாக காட்டுகிறார்கள். அதன் பிறகு தற்போதைய நாளை காட்ட உளவாளியின் மகன் விஜய் பிரகாஷை (கார்த்தி) அறிமுகம் செய்கிறார்கள். ஒரு தேச துரோகியின் மகன் என்று வருந்தும் விஜய் பிரகாஷ் பப்ளிசிட்டி தேடத் துடிக்கும் காவலன்.
நீர் நிலைகளை தனியார் மயக்கமாக்குவதை எதிரத்து போராடி வந்த சமைரா(லைலா) மர்மமான முறையில் இறக்கிறார். அவரை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்க விஜய் பிரகாஷ் முயற்சி செய்யவே பல பொய்கள், அதிர்ச்சிகரமான உண்மைகளை தெரிந்து கொள்கிறார். தொழில் அதிபரான ரத்தோரை (சங்க்கி பாண்டே) தடுக்க விஜய் பிரகாஷின் அப்பா கார்த்தியால் மட்டுமே முடியும்.
பி.எஸ். மித்ரனின் சர்தார் படத்தின் கதை ஏற்கனவே தெரிந்தது தான் என்றாலும் அதை அவர் திரையில் காட்டிய விதம் நம்மை கவர்கிறது. நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும், அது தனியாரிடம் சென்றுவிடக் கூடாது என்பதை சிறப்பாக வலியுறுத்தியுள்ளார். அப்பா, மகனாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் கார்த்தி. துணை கதாபாத்திரங்களுக்கு கூட அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் மித்ரன்.
சர்தாரில் ஒரேயொரு பிரச்சனை என்னவென்றால் அது நம் மூளையை தொட்ட அளவிற்கு மனதை தொடவில்லை. கொலைகள் நடக்கும்போது கூட நமக்கு கவலை ஏற்படவில்லை, கோபம் வரவில்லை. மாஸ் காட்சியில் கூட சந்தோஷம் வரவில்லை. ஆனாலும் சுற்றுச் சூழலைப் பற்றி பேசும் தருணத்தில் இருக்கிறோம். படத்தை கண்டிப்பாக வரவேற்கலாம்..