பொம்மை நாயகி திரை விமர்சனம்

நடிகர்கள்: யோகிபாபு, சுபத்ரா, ஸ்ரீமதி, ஹரிகிருஷ்ணன், அருள்தாஸ்
இயக்கம் : ஷான்
இசை    : சுந்தரமூர்த்தி
தயாரிப்பு  : பா.ரஞ்சித்

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அல்லிக்குப்பம் என்கிற ஊரில் தன் மனைவி, மகளுடன் வசித்து வருகிறார் வேலு (யோகி பாபு.) அதே பகுதியில் அவருடைய அண்ணன் (அருள்தாஸ்) குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். ஆனால், வேலு தன் தந்தையின் இரண்டாம் தாரத்திற்குப் பிறந்த மகன் என்பதால்அண்ணன் ஒரு விலகலுடனே பழகி வருகிறார். அதற்கு முக்கியக் காரணம் வேலுவின் அம்மா ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர். மேலும், அருள்தாஸ் அரசியலிலும்செல்வாக்குடன் இருக்கிறார்.

பொம்மை நாயகி Mellinam
பொம்மை நாயகி

இந்த நிலையில், திடீரென கோயில் திருவிழாவின்போது தன் மகளான பொம்மை நாயகியைக் காணவில்லை என வேலு வீட்டிற்கு தேடிச் செல்கிறார். அங்கு இருவர் அந்தக் குழந்தையிடம் முறைகேடாக நடக்க முயற்சி செய்கின்றனர்.அருள்தாஸிடம் பிரச்னையை கொண்டு செல்கிறார். இந்தக் குற்றத்தை செய்தவர்கள்அருள்தாஸ் சாதியைச் சேர்ந்தவர்கள். இதை அருள்தாஸ் எப்படி எதிர்கொள்கிறார்? தன்மகளுக்கான நீதியை ஒரு தந்தையாக வேலு எப்படி பெற்றுத் தருகிறார்? என்கிற மீதிக் கதை

எதார்த்தமான திரைக்கதையுடன் நகர்கிறது. படத்தில் இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்தவராக வரும் ஜீவா – (ஹரி கிருஷ்ணன்) சில இடங்களில் கதைக்கு சரியான தேர்வாக நடித்துள்ளார். யோகி பாபுவின் அப்பாவாக நடித்த ஜி.எம். குமார், மனைவியாக நடித்த சுபத்ரா, பொம்மை நாயகியான ஸ்ரீமதி ஆகியோர் மனதிற்கு நெருக்கமான முகங்களாக இருக்கிறார்கள். அதேநேரம், தன் மகளின் நிலையைக் கண்டு துக்கத்துடன் அலையும்தந்தையாக யோகி பாபு நேர்த்தியான நடிப்பை வழங்கியுள்ளார். அண்ணன் தம்பியாக இருந்தாலும் சாதியும் அதிகாரமும் ஒருவரை எப்படி மாற்றுகின்றன என்பதை கருவாக்கொண்டு கதை உருவாக்கியிருக்கிறார்.

பொம்மை நாயகி - யோகிபாபு Mellinam
பொம்மை நாயகி – யோகிபாபு

நீதிபதியாக நடித்திருக்கும் எஸ்.எஸ். ஸ்டான்லி மற்றும் பிரியாணி கடை பாயாக வரும் ஜெயசந்திரன்  சமூகநீதியை பிரதிபலிக்கின்றார். படத்தின் ஒளிப்பதிவை அமிர்தராஜ் என்பவர் செய்திருக்கிறார். பளிங்கு கல் போல் துல்லியமாக செய்திருக்கிறார். சுந்தரமூர்த்தி இசை அமைத்திருக்கிறார். பாடல்களில் கவனம் செலுத்திய அளவிற்கு பின்னணி இசையில் சோபிக்கவில்லை. மொத்தத்தில் பெண் குழந்தையின் படிநிலையை இயல்பாக படம் பிடித்து காட்டுகிறார்.