பதான் திரை விமர்சனம்
நடிகர்கள் : ஷாருக்கான், ஜான்ஆபிரகாம், தீபிகாபடுகோனே, டிம்பிள் கபாடியா
இயக்கம் : சித்தார்த் ஆதித்தன்
இசை : விஷால் தத்லானி
தயாரிப்பு : யஷ் சோப்ரா
கதை என்று எடுத்துக்கொண்டால், இராணுவத்தில் ஏஜென்டாக பணிபுரிந்த ஜான் அபிரகாம் (ஜெம்), மற்ற நாடுகளின் கைக்கூலியாக மாறி, இந்தியாவிற்கு ஆபத்து விளைவிக்கும் ஒரு ‘ரத்த வித்து’ என்று சொல்லக்கூடிய பயோ பாம் ஒன்றை கண்டுபிடித்து, இந்தியாவிற்கு எதிராக செயல்படுத்த நினைக்கிறான். அந்தத் திட்டத்தை திபிகா படுகோன் (ரபேலா), ஷாருக்கான் (பதான்) முறியடிக்கிறார்கள் என்பதுதான் கதை.
பதான் ஒரு கமர்சியல் ஆடியன்ஸ்க்கான திரைப்படம். ஷாருக்கான் செம ஸ்டைலிஷாக நடித்துள்ளார். ஷாருக்கான் ரசிகர்களுக்கு இந்த படம் மிகவும் பிடிக்கலாம். ஓபனிங் காட்சிகளில் இருந்து இறுதிவரை ஆக்சன் காட்சிகளில் அசத்தியுள்ளார். அவருடன் இணைந்து தீபிகா படுகோன், ஜான் ஆப்ரஹாம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளர். தீபிகா படுகோன் ஷாருக்கானுடன் படம் முழுவது பயணிக்கும் கதாபாத்திரம். ஜான் ஆப்ரஹாம் வில்லனாக நடித்துள்ளார். இவர்களை தவிர நடிகர் சல்மான் கான் ஒரு ஆக்ஷன் காட்சியில் கேமியோ செய்துள்ளார். அந்த காட்சி தியேட்டரில் மிகப்பெரிய கைதட்டலை பெறும். ஆக்ஷன் காட்சிகள் மிகப்பெரிய ப்ளஸ். அதனை படமாக்கிய விதத்திற்கு பாராட்டியே ஆக வேண்டும்.
படத்தில் அதிக ஆக்ஷன் காட்சிகள் என்பதால் அதன் இசை, கேமரா மற்றும் ஒளிப்பதிவு அந்த காட்சிகளைமேலும் பிரம்மாண்டமாக திரையில் தெறிக்க விடுகிறது. பாடல்களில் தீபிகாவின் கவர்ச்சி ரசிக்க வைக்கு விதத்தில் இருக்கிறது. பாடல்கள் மற்றும் பிண்ணனி இசை சுமார் தான். ஆக்ஷன் காட்சிகளை தவிர படத்தின் அனைத்து காட்சிகளும் பல படங்களின் காட்சிகளை சேர்த்து எடுத்துள்ளார்கள். லாஜிக் இல்லாத காட்சிகள் என்று எதை சொல்வது என்று தெரியாத அளவிற்கு நிறைய காட்சிகள் உள்ளது. இன்னும் கதாபாத்திரங்களை வடிவமைத்ததில் சரியாக மெனக்கட்டிருக்கலாம்.
ஜான் ஆப்ரஹாம் மற்றும் தீபிகா வின் கதாபாத்திரங்கள் மீதான சந்தேகம் படம் முழுவதும் இருக்கும். படம் எப்படி இருக்கு என்று கேட்டால் லாஜிக் இல்லாத காட்சிகள் ஆனாலும் பாட்டு, ஃபைட்டு என கமர்ஷியல் ஆடியன்ஸை குறிவைத்து எடுத்துள்ளார்கள். பார்க்க விரும்புவர்கள் பார்த்து மகிழலாம்.