குழந்தைகள் எப்போதும் புதுமையும் வழவழப்பான பொருள்களையும் அதிகம் விரும்பும். அதில் ஓன்றுதான் பாஸ்தா. வெறும் பாஸ்தா மட்டும் அல்லாமல் அதை சாலட்டுடன் சேர்த்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும். அவற்றை சமைப்பது எப்படி? என்பதை இப்போது பார்ப்போம்!
தேவையான பொருட்கள் :
- தக்காளி 100 கிராம்
- மஞ்சள் குடைமிளகாய் 100 கிராம்
- வெள்ளரிக்காய் 100 கிராம்
- கருப்பு ஆலிவ் 15 எண்கள்
- பிராக்கோலி சிறியது
- பன்னீர் சிறிது
- கொத்தமல்லி சிறிதளவு
- ஸ்பிரிங் பாஸ்தா 100 கிராம்
செய்முறை :
ஸ்பிரிங் பாஸ்தாவை உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.கொத்தமல்லி, பன்னீர், தக்காளி, மஞ்சள் குடைமிளகாய், வெள்ளரிக்காய், பிராக்கோலியை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.ஆலிவ் எண்ணெய், புதினா, எலுமிச்சைச் சாறு, மிளகுத் தூள், உப்பு அனைத்தையும் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய பன்னீர், தக்காளி, மஞ்சள் குடைமிளகாய், வெள்ளரிக்காய், பிராக்கோலியை போட்டு அதனுடன் அரைத்த மசாலாவை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும். கடைசியாக கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து பரிமாறவும்.