அகில இந்தியப் போட்டிகளில் தங்கம் குவிக்கும் நெல்லை மாணவிகள்!

ஒரு காலத்தில் இந்தியாவில் ஆண்கள் ஆதிக்கத்திலிருந்த பேட்மிண்டன் இன்று பெண்கள் கைகளுக்கு மாறியுள்ளது. ஆம்.. இந்தியாவில் பல மாநிலங்களில் பெண்கள் பேட்மிண்டன் போட்டிகளில் சாதனை புரிந்து வருகின்றனர்.அண்மையில் தமிழக அணிக்கான பேட்மிண்டன் திருநெல்வேலி, வண்ணார்பேட்டை பகுதியில் இயங்கி வரும் விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளியில் +1 பியூர் சயின்ஸ் பயின்று வரும் U.ரேஷிகா, ஹைதரபாத்தில் நடந்த பேட்மிண்டன் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கம் வென்று அசத்தியிருக்கிறார். இனி அவர் கூறியதாவது:

U.ரேஷிகா

என்னுடைய அப்பா உதயசூரியன் பல்கலைகழக விளையாட்டு வீரர் மற்றும் பாளையங்கோட்டையில் டி.எஸ்.பியாக பணியாற்றி வருகிறார். அம்மா ராதிகா இல்லத்தரசி. அண்ணன் தினேஷ்குமரன் உயர்கல்வியில் படித்து வருகிறார். அவரும் ஒரு பேட்மிண்டன் வீரர் தான். அவரை பார்த்துதான் பேட்மிண்டன் விளையாட்டைக் கற்றுக்கொண்டேன். 2016 ஒலிம்பிக் போட்டியில் தங்கபதக்கம் வென்ற ஸ்பானிஸ் விளையாட்டு வீராங்கனை, கரோலினா மரின் ரோல்மாடலாக நினைத்து விளையாடி வருகிறேன், அப்புறம், நான், நான்காம் வகுப்பு முதல் பேட்மிண்டன் பயிற்சியை தொடங்கினேன். எனக்கு முதன் முதலில் பேட்மிண்டன் போட்டியில் வழிகாட்டியது லட்சுமி என்ற பயிற்சியாளர்தான்.

பரிசளிப்பு விழா போஸ்டர் மெல்லினம்
பரிசளிப்பு விழா போஸ்டர்

நான், தர்மபுரியில் முதல் முதலாக கலந்து கொண்ட (2016 ஆம் ஆண்டு) வெற்றியை 10 வயதுக்குட்பட்டோர் போட்டியில் வென்றேன். தொடர்ந்து ஏழு வருடங்களாக பேட்மிண்டன் போட்டியில் தொடர்ச்சியாக பங்கெடுத்து வருகிறேன். இப்போது 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் ஹைதராபாத்தில் கடந்த அக்டோபர் மாதம் நடந்த தேசிய அளவிலான போட்டியில், 2 தங்கப்பதக்கத்தை வென்று தமிழ்நாட்டுக்கும், தான் படிக்கும் விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளிக்கும், தனது அண்ணன் தினேஷ்குமரனின் நிறைவேறாத கனவையும் நிறைவேற்றியதற்காக பெருமைப்படுகிறேன். 2023 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சர்வதேச போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்ள இருக்கிறேன்.

ஒரு நாள் சராசரியாக காலையும், மாலையும் சேர்த்து நான்கு அல்லது ஐந்து மணி நேரம் பயிற்சி மேற்கொள்கிறேன். 2028 அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்லில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதை (நாட்டுக்காக) எனது லட்சியமாக கொண்டுள்ளேன். இதுவரைக்கும் நடந்த போட்டியில் திருச்சியில் நடந்த State Level போட்டி சவாலாக இருந்தது. ஒடிசாவில் நடைபெறும் 17 வயதிற்குட்பட்டவர்களுக்கான புவனேஷ்வர் போட்டியில் விளையாட தயாராக இருக்கிறேன். அதே நேரத்தில் என்னுடைய பள்ளி நிர்வாகம் எனக்குத் தேவையான அத்தனை ஒத்துழைப்பையும் கொடுத்து உதவுகின்றனர். இது என்னைப்போன்ற விளையாட்டு வீராங்கனைகளுக்கு ஊக்கமாகவம் உந்து சக்தியாகவும் இருக்கிறது.

பரிசளிப்பு மெல்லினம்
பரிசளிப்பு

R.அபிநயா

அதே பள்ளியில் இன்னொரு மாணவி R.அபிநயா தடகள வீராங்கனையாக வெற்றிவாகை சூடியிருக்கிறார். இனி அவர் கூறியதாவது: “ நான் எந்தவித விளையாட்டு பிண்ணனி இல்லாத குடும்பம், தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே கல்லூத்து என்ற கிராமம்தான் என்னுடைய பூர்வீகம். என்னுடைய விளையாட்டு பயிற்சிக்காக சொந்த ஊரைவிட்டு திருநெல்வேலிக்கு வந்து சொந்தமக தொழில் செய்கிறார் எனது தந்தை ராஜராஜன்.அம்மா சங்கரி இல்லத்தரசியாக இருந்து என்னுடைய விளையாட்டிற்கான சத்தான உணவுகள் தந்து ஊக்க சக்தியாக இருக்கிறார். ததடகளப் போட்டி மட்டும் அல்லாமல் பள்ளி கிரிக்கெட் அணியில் கேப்டனாகவும் இருக்கிறேன். நான் +1 காமர்ஸ் படிக்கிறேன். இதே பள்ளியில் தங்கை சுமித்ரா 7ம் வகுப்பு படித்து வருகிறார்.

அமெரிக்க தடகள வீராங்கனை ஷாகேரி ரிச்சர்ட்ஸனை ரோல் மாடலாக கொண்டுள்ளேன். தனது சுய விருப்பத்தின் பெயரிலே தடகளத்தை தேர்வு செய்தேன். 80மீட்டர், 100 மீட்டர்100மீட்டர் போன்ற அனைத்து ரிலே ஒட்டப்பிரிவுகளிலும் பங்கு எடுத்து வருகிறேன். அத்லெடிக் போட்டியில் ஆறாம் வகுப்பு முதல் பங்கெடுத்து வருகிறேன். மண்டல அளவிலான போட்டியில் முதன்முதலில் கலந்து கொண்டு அதன் பின்பு நவம்பரில், அஸ்ஸாம் போட்டியில் தங்கம், வெண்கலம் என இதுவரைக்கும் தமிழ்நாடு அணிக்காக 40க்கும் அதிகமான மெடல்கணை வாங்கி குவித்து எனது பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளேன்.

விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி மெல்லினம்
விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி

அதற்கு பள்ளி நிர்வாகம் கொடுத்த ஒத்துழைப்புதான் இவ்வளவு வெற்றியையும் பெற வைத்தது என்பதை உறுதியாக கூறுகிறேன். 2007 முதல் மாநில அளவிலான சாதனை நேரத்தை 12.42 என்பதை 12.38 நொடியில் கடந்து தகர்த்துள்ளார். மீண்டும் தனது சாதனையை தானே 12.12 நொடியில் கடந்து சாதனை செய்துள்ளார். தினமும் இரண்டரை மணி நேரத்துக்கும் அதிகமாக பயிற்சி மேற்கொள்கிறார்.

– பிளிம்சால் முத்துக்குமார்