லவ் டுடே திரை விமர்சனம் – Love Today

லவ் டுடே திரை விமர்சனம்

நடிகர்கள்: பிரதீப், இவனா, யோகிபாபு, ராதிகா சரத்குமார், சத்யராஜ் மற்றும் பலர்
இயக்கம் : பிரதீப் ரங்கநாதன்
இசை    : யுவன் சங்கர் ராஜா
தயாரிப்பு  : AGS Production

Love Today Movie Review Mellinam Tamil
Love Today Movie Review

உருகி உருகி காதலிக்கும் நிகித்தாவிற்காக (இவனா) புது போன் ஒன்றை பரிசளிக்கிறார் உத்தமன் பிரதீப் (பிரதீப் ரங்கநாதன்). இவர்கள் காதலிப்பது நிகித்தாவின் அப்பாவிற்கு (சத்யராஜ்) தெரியவர, அவர்களின் இருவரின் போனை ஒருவருக்கொருவர் மாற்றி கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கிறார் . இதற்கு, பின் இருவரின் போன்களை ஒருவொருக்கொருவர் நோண்டி பார்க்க, அவர்களை பற்றிய அனைத்து அன்யோன்ய செய்திகள் வெளியே வருகிறது. உண்மையை தெரிந்த காதலர்கள் இருவரும், கோபப்பட்டு சண்டை போடுகிறார்கள். இறுதியில் நாயகனும் நாயகியும் ஒன்று சேர்வார்களா, இல்லையா என்பதுதான் மீதிக்கதை..

Love Today Movie Poster
Love Today Movie Poster

பிரதீப் ரங்கநாதன், இந்த படத்தை இயக்கி அவரே நாயகனாக நடித்துள்ளார். கோமாளி படத்தில் குட்டி சீன் ஒன்றில் நடித்து இருந்தாலும், அவருக்கு முழு நீள படத்தில் நடிப்பது இதுவே முதன் முறை. ஆனால்,  இந்தப்படத்தில் தனக்குரிய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி பார்வையாளர்களின் மனதை கவர்ந்துவிட்டார்(தனுஷ் + எஸ்ஜே சூர்யா மாடுலேஷன்). நடிப்பில் அசத்தி இருந்த பிரதீப் திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்திலும் செம ஸ்கோர் செய்கிறார். படத்தில் எந்த ஒரு இடத்திலும்  போரடிக்கவில்லை. முழு படத்தையும், பிசிறு ஏதும் இல்லாமல் நீட்டாக இயக்கியுள்ளார்.

நாச்சியார், ஹீரோ ஆகிய படங்களில் நடித்த இவனாவும் படத்திற்கு தேவையான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். பிரதீப்பிற்கு, அம்மாவாக நடித்த ராதிகா சரத்குமார் பற்றி சொல்லவே தேவையில்லை. எப்போதும் மகனிடம் சண்டை போடும் அம்மாவாக இருந்தாலும், படத்தின் இறுதி காட்சியில், “நம்பிக்கைதான் முக்கியம்” என்ற சூப்பர் செய்தியினை சொல்லியுள்ளார்.அடுத்தாக, இவனாவிற்கு, அப்பாவாக நடித்த சத்யராஜ், பூமர் அங்கிளாக நடிக்கவில்லை..அந்த கதாபாத்திரமாகவே மாறிவிட்டார்.
யாராலும் புரிந்து கொள்ள முடியாத இவரும், க்ளைமாக்ஸில் இன்றைய காலத்து காதல் பற்றி “நாங்கள் உங்களை பிரிக்க தேவையில்லை, அதற்குமுன் நீங்களே பிரிந்து விடுவீங்க”என்று டைமிங்காக பேசி அசத்தினார்.

யோகி பாபு காமெடி செய்து பார்த்திருப்போம், ஆனால் இப்படத்தில் தனியாக காமெடியனாக பயணிக்காமல், அவர் படக்கதையுடன் பிண்ணி பிணைந்து நடித்துள்ளார். கடைசியில், எமொஷனலாக பேசி அனைவரையும் ஃபீல் செய்து விட்டார். துணை கதாப்பாத்திரத்தில் நடித்த ரவீனா ரவி பார்க்க அழகாக உள்ளார். சூப்பர் சிங்கர் ஆஜித், குட்டி சீனில் வந்தாலும் எதர்த்தமாக நடித்துள்ளார். பின், பிரதீப் ரங்கநாதனின் நண்பர்களாக நடித்த ஆதித்யா கதிர் மற்றும் பல நபர்கள், டைமிங் சென்ஸ் காமெடியை டெலிவர் செய்து கைத்தட்டல்களை பெற்றனர்.

Love Today Movie Mellinam Tamil
Love Today

யுவனின் இசை வேற லெவலில் இருந்தது. படத்திற்கு தேவையான நேரங்களில் பாடல்கள், உணர்ச்சியை தூண்டும் பிண்னணி இசை ஆகிய அனைத்தும், யுவன் எப்போதும் யுவன் தான் என்று உறுதி செய்திருக்கிறார். எல்லோருக்கும்,  ‘பச்சை இலை’ மற்றும்  ‘என்னை விட்டு’ ஆகிய பாடல்கள், ரசிகர்களை கொன்று தின்றது என்றே சொல்லலாம். இன்றைய காதலை அடிப்படையாக கொண்ட கதை என்பதால் முகம் சுழிக்கும் காட்சிகளை படம் கொண்டிருக்கும் என்ற எண்ணத்தை, சுக்கு நூறாக உடைத்து இருக்கிறது. ஒரு நல்ல படத்தை பார்த்து சிரித்து  நீண்ட நாட்கள் ஆகிவிட்டது என்றால் இப்படத்தை பாருங்கள். பார்த்து சிரித்து  நீண்ட நாட்கள் ஆகிவிட்டது என்றால் இப்படத்தை பாருங்கள்.