லத்தி திரைப்பட விமர்சனம்

லத்தி திரைப்பட விமர்சனம்

Now Watch Laththi Movie Review Here

நடிகர்கள் : விஷால், ரமணா, சுனைனா, தலைவாசல் விஜய்
இயக்கம்  : வினோத்குமார்
இசை     : யுவன்சங்கர் ராஜா
தயாரிப்பு  : ரமணா, நந்தா (ராநா)

லத்தி ஸ்பெஷலிஸ்டான முருகானந்தம் (விஷால்) சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். இதையடுத்து மீண்டும் வேலையில் சேர உதவி செய்யுமாறு உயர் அதிகாரி ஒருவரின் உதவியை நாடுகிறார். டிஐஜி கமல் (பிரபு) முருகானந்தத்திற்கு மீண்டும் வேலை கிடைக்கச் செய்கிறார். அதே சமயம் தன் கஸ்டடியில் இருக்கும் ஒருவரை டார்ச்சர் செய்யுமாறு முருகானந்தத்திடம் கூறுகிறார் கமல். தான் டார்ச்சர் செய்யும் நபர் மிகவும் மோசமான கேங்ஸ்டரான சுறாவின் மகன் வெள்ளை (ரமணா) என்பது முருகானந்தத்திற்கு தெரியாது.  லத்தியை சுழட்டி அடித்த முருகானந்தத்தை தேடுகிறது ரவுடி கும்பல். அப்போது, கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் முருகானந்தம் மற்றும் அவரின் 10 வயது மகன் சிக்குகின்றனர்.  கொடூரமான கேங்ஸ்டரின் கோபத்தில் இருந்து தப்பித்தார்களாஉ என்பதே மீதிக்கதை.

Laththi Movie Review Mellinam Tamil
Laththi Movie Poster

விஷாலின் லத்தி படத்தின் நோக்கம் சரியாக இருக்கிறது. படம் நல்லபடியாக துவங்கி செல்கிறது. சில காட்சிகளில் நம்மை வியக்கும் வைக்கிறது. ஆனால் நேரம் செல்ல செல்ல கதையில் தொய்வு ஏற்படுகிறது.இரண்டாம் பாதியில் வரும் 45 நிமிட ஸ்டண்ட் காட்சி தான் படத்தின் மிகப்பெரிய மைனஸ்களில் ஒன்று. சண்டை காட்சி மிகவும் நீளமாக இருப்பதால் நாயகனுக்காக பரிதாபப்படவோ… உச் கொட்டவோ முடிவதில்லை.. எப்பொழுது தான் காட்சி முடியும் என்று இருக்கிறது. கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் நூற்றுக்கணக்கான கிரிமினல்களை விஷால் எதிர்கொள்ளும் காட்சி நன்றாக இருக்கிறது. ஆனால் அடுத்து வரும் காட்சிகள் ஓவராக உள்ளது.

Laththi Movie Review Mellinam Tamil
Laththi Movie Banner

பிரபு சிறிது நேரமே வந்தாலும் சிறப்பாக நடித்து தன்னை பற்றி பேச வைத்துவிட்டார். படத்தின் பெரிய பலமே ஒளிப்பதிவும் இசையும்தான். அதே நேரத்தில் விஷால் படத்தை தனி ஆளாக சுமந்து செல்கிறார். ஆனால், அவர் உடம்பு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. கான்ஸ்டபிள் கதாபாத்திரத்திற்காக தன் பாடி லாங்குவேஜை மாற்றியிருக்கிறார் விஷால். அதை பார்த்தாலே தெரிகிறது. யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்களுக்கான இசை சூப்பர், பி.ஜி.எம் பெரிய சோபிக்கவில்லை.மொத்தத்தில் லத்தியைக் கொண்டு ரவுடிகளை மட்டும் துரத்தவில்லை. ரசிகர்களையும் சேர்த்து துரத்துகிறார்.