குடவாழை பொங்கல்!

நம் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்ட மிகவும் பழமையான அரிசி வகையாகும். நூற்றி முப்பது நாள் வயதுடைய இந்த நெல் ரகம், மோட்டா ரகம். சிவப்பு நெல், சிவப்பு அரிசி. உவர் நிலத்தைத் தாங்கி வளரவும், கடலோரப் பகுதியில் கடல் நீர் உட்புகும் நிலத்தில் சாகுபடி செய்யவும் ஏற்ற இரகமாகும். தொழிலாளர்களின் தோழன் என்று அழைக்கப்படுவது இந்த அரிசிதான். இந்த அரிசியில் பொங்கல் செய்து சாப்பிட்டால், வயிற்றுகோளாறுகள் சரிசெய்யப்படும். குறிப்பாக, வயிற்றை சுத்தப்படுத்தவும். புண்ணை ஆற்றவும் உதவும்.

தேவையான பொருள்கள்:

  • குடவாழை அரிசி – கால் கிலோ
  • வெல்லம் – 200 கிராம்
  • பச்சை பயிறு – 100 கிராம்
  • மாதுளம் பழம் முத்துக்கள் – 100 கிராம்
குடவாழை பொங்கல் Mellinam
குடவாழை பொங்கல்

செய்முறை:

கரும்பு வெல்லத்தை பொடித்து கொள்ள வேண்டும்.குடவாழை அரிசியை 16 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பச்சை பயிரை ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.பச்சைப் பயிறு, குடவாழை அரிசியை நன்றாக கழுவி குக்கரில் போட்டு 3 டம்ளர் தண்ணீர் ஊற்ற வேண்டும்.அதனுடன் பொடித்த கரும்பு வெல்லத்தை சேர்த்து குக்கரை மூடி ஐந்து விசில் வந்தவுடன் இறக்கவும். விசில் போனவுடன் மூடியை திறந்து மாதுளம் பழம் முத்துக்களை சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும். சூடான சுவையான குடவாழை அரிசி பொங்கல் தயார்.