நடிகர்கள் : உதயநிதி, சதீஷ், பிரசன்னா, வசுந்ரா, பூமிகா, ஆத்மிகா, சென்ராயன்
இயக்கம் : மு.மாறன்
இசை : சிந்துகுமார்
தயாரிப்பு: வி.என். ரஞ்சித்குமார்
குடியேருவதற்காக அருள்குமார் (உதயநிதி ) தனது நண்பருடன் வீடு தேடி வருகிறார், இந்த சமயத்தில் வாடகைக்கு வீடு கிடைக்கிறது. ஆனால் இந்த வீட்டில் ஏற்கனவே சோமு (பிரசன்னா) தங்கியிருக்கிறார். அவருடன் சேர்ந்து அதே வீட்டில் தங்க முடிவெடுத்து குடியேறுகிறார். வீட்டிற்கு வந்த அதே நாள் இரவில் பிரசன்னா, உதயநிதியை சரக்கு அடிக்க வாருங்கள் என அழைக்கிறார். தனக்கு சரக்கு அடிக்கும் பழக்கம் இல்லை என உதயநிதி கூற சரக்கடிக்கும் பழக்கம் இருக்கும் உதயநிதி நண்பன் சதீஸ்ஸூடன் இணைந்து இருவரும் குடிக்கிறார்கள்
உதயநிதி கடைக்கு வெளியில் இருக்கிறார். அப்போது, கவிதா (பூமிகா) தள்ளாடி கொண்டே தன்னுடை காரை கொண்டு வந்து ஓரு இடத்தில் மோதுகிறார். இதை பார்க்கும் உதயநிதி அவருக்கு என்ன ஆனது என பார்க்க காரின் அருகே செல்கிறார். அவர் நலமுடன் இருக்கிறார். ஆனால், அவரால் காரை ஒட்டி செல்ல முடியாது என்பதினால் உதயநிதியே அவருடைய வீட்டிற்கு காரை ஒட்டி செல்கிறார்.
தன்னை வீட்டில் இறக்கி விட்டதனால் தன்னுடைய காரை எடுத்து செல்லுங்கள் என பூமிகா கூறுகிறார். இதனால் பூமிகாவின் காரை எடுத்துக்கொண்டு தன்னுடைய வீட்டிற்கு செல்கிறார் உதயநிதி.அடுத்த நாள் காலையில் காரை திருப்பி கொடுக்க செல்லும் பொழுது காரின் டிக்கியில் பூமிகா இறந்துப்போய் பிணமாக கிடக்கிறார். இதனால் உதயநிதியும் அதிர்ச்சியடைக்கிறார்.பூமிகா எப்படி இறந்தார்? ஒரே இரவில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதி கதை
கதாநாயகன் உதயநிதி வழக்கம் போல் நடித்துள்ளார். கொலையை யார் செய்தது, இதன் பின்னணி என்ன என்று தேடும் உதயநிதியின் நடிப்பு படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. பிரசன்னா வழக்கம் போல் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் பின்னிபெடலெடுக்கிறார். கதையின் முக்கிய கதாபாத்திரமாக வரும் பூமிகாவின் நடிப்பு பரவாயில்லை ரகம். கதாநாயகி ஆத்திமா தனக்கு கொடுத்த கதாபாத்திரதை அழகாக நடித்துள்ளார். ஸ்ரீகாந்த் நடிப்பு படத்துடன் ஒன்றிபோகிறது.
இயக்குனர் மு. மாறன் திரைக்கதை நன்றாக இருந்தாலும் புதிதாக நம்மை கைத்தட்ட வைக்கும் அளவிற்கு திரில்லர் காட்சிகள் படத்தில் இடம்பெறவில்லை. எளிதாக சஸ்பென்சை கண்டுபிடிக்க முடிகிறது. திரைக்கதை எங்குமே தொய்வு இல்லை. ஆனால் பல இடத்தில் மிஸ்டேக் இருக்கிறது. அதை கொஞ்சம் சரிசெய்து இருக்கலாம். திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் படங்களுக்கு லாஜிக் மிகவும் முக்கியமான ஒன்று. பின்னணி இசைக்கு பாராட்டு. ஒளிப்பதிவு மிக மிக அருமை. மொத்தத்தில் திரில்லர் படம். ஆனால் சூப்பர் திரில்லர் படம் அல்ல.