வட இந்தியாவில் சீரகம் அதிகம் பயிர்செய்யப்படுகிறது. தமிழகத்தில் இதை ஒரு மூலிகை என்றளவில் பயன்படுத்துகின்றனர். உலகம் முழுவதும் முக்கியமாக அரேபியாவில் மசாலா பொருள்களில் இது நீண்ட காலமாக பயன்படுகிறது. தமிழர்கள் இதை நீண்ட நெடுங் காலமாக பயன்படுத்தி வந்தனர் என்பது தெரிகிறது. சீரகம் பயன்படுத்தி புலாவ் செய்வது எப்படி? என்பதைப் பார்ப்போம்.
தேவையான பொருள்கள்:
பாஸ்மதி அரிசி – 1 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்:
நெய் – 2 மேசைக்கரண்டி
எண்ணெய் – 2 மேஜைக்கரண்டி
சீரகம் – 2 மேசைக்கரண்டி
பிரிஞ்சி இலை – 1
பட்டை – சிறிய துண்டு
கிராம்பு – 2
பெரிய வெங்காயம் – 1
செய்முறை:
வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கி வைக்கவும். பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து நெய், எண்ணெய் இரண்டையும் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை போடவும். பட்டை பொன்னிறமானதும் சீரகம் போடவும். சீரகம் பொரிந்தவுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போனதும் ஊறவைத்துள்ள பாஸ்மதி அரிசியை சேர்த்து அதனுடன் 2 கப் தண்ணீரும் உப்பும் சேர்த்து நன்றாக கலக்கி மூடி போட்டு மூடவும். நீராவி வந்ததும் வெயிட் போடவும். முதல் விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் கழித்து அடுப்பை ஆப் பண்ணவும். நீராவி அடங்கியதும் மூடியை திறந்து நன்றாக கிளறி பாத்திரத்திற்கு மாற்றி விடவும். சுவையான சீரகப் புலாவ் தயார். குருமா வகைகளுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.