பூண்டு சூப்

தமிழ் மரபுசார்நத உணவுகளில் பூண்டுக்கு முக்கிய இடம் உண்டு. உணவுகளில் பூண்டு சேர்ப்பதால் நச்சு உணவில் உள்ள நச்சு நீக்கப்படும் என்றும். உணவை செரிப்பதற்கான மூலக்கூறு பூண்டில் இருக்கிறது என்பதாலும் பயன்படுத்துகின்றனர். அதே பூண்டை சூப் ஆக செய்து சாப்பிட்டால் வயிற்றில் ஏற்படும் அலற்சி மற்றும் புண்களை குணமாக்கும்.

தேவையான பொருட்கள் :

  • முழுப்பூண்டு 2,
  • வெங்காயம் ஒன்று,
  • தண்ணீர் அரை லிட்டர்,
  • மைதா தலா ஒரு மேசைக்கரண்டி,
  • பால் ஒரு கப்,
  • கெட்டித் தயிர் சிறிதளவு,
  • ஆலிவ் எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி,
  • மிளகுத் தூள், உப்பு தேவையான அளவு.

செய்முறை :

பூண்டை தோல் உரித்து கொள்ளவும்.வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.மைதாவை வெறும் கடாயில் போட்டு வறுத்து வைக்கவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், உரித்த பூண்டு சேர்த்து நன்கு வறுக்கவும். இதில் சிறிது எடுத்து தனியே வைத்து கொள்ளவும். அடுத்து அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.அடுத்து அதில் வறுத்த மைதாவையும் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கட்டிஇல்லாமல் கிளறி, தண்ணீரை சேர்த்து கொதிக்கவிடவும். பூண்டு நன்கு வெந்தவுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி வடிகட்டி, தனியாக எடுத்து வைத்த வறுத்த பூண்டு, தயிர் சேர்த்துப் பரிமாறவும்.