DSP திரை விமர்சனம்
நடிகர்கள்: விஜய்சேதுபதி, அனுகீர்த்தி, இளவரசு, புகழ், விமல் மற்றும் பலர்
இயக்கம் : பொன்ராம்
ஒளிப்பதிவு: தினேஷ் கிருஷ்ணன்
இசை : டி.இமான்
சந்தையில் பூ வணிகம் செய்கிறார் இளவரசு. அவருடைய மகன்தான் வாஸ்கோடகாமா (விஜய்சேதுபதி) தன் மகனை அரசு வேலையில் பார்க்க ஆசைப்படுகிறார். அதற்கான முயற்சியும் செய்கிறார். அதே சந்தையின் முட்டை மொத்த வணிகம் செய்யும் முட்டை ரவி, பெரிய ரவுடியாக வலம் வருகிறார். அவர், விஜய்சேதுபதி நண்பனை கொலை செய்துவிடுகிறார். அதனை தட்டிக்கேட்கும் விஜய்சேதுபதியை காவல்துறை கைது செய்கிறது. அதே காவல்துறை வழக்கு எதுவும் தொடுக்காமல் விடுவிக்கிறது. அதன்பு ரவடி முட்டை ரவி எம்.எல்.ஏ ஆகிறார். விஜய்சேதுபதி டிஎஸ்பி ஆகிறார். அடுத்து என்ன நடந்தது என்பதுதான் கிளைமேக்ஸ்.
விஜய்சேதுபதி தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். கொஞ்சம் உடல் எடையைக் குறைத்திருந்தால் கூடுதல் மாஸாக இருந்திருக்கும். காதல் காட்சியில் ஒரு நகைச்சுவை டிராவையே நடத்தி அதகளப்படுத்துகிறார். அவருக்கு ஏற்ற ஜோடியாக அன்னபூர்ணி (அனுகீர்த்தி வாசன்) சரியான போட்டியாக நடித்திருக்கிறார். டி.எஸ்.பி ஆக அறிமுகப்படுத்தியதற்கு பின்பு அதிகமாகன கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துவதால் படத்தின் விறுவிறுப்பு குறைந்துவிடுகிறது. ரசிர்கள் ஓவ்வொருவருக்கு எப்போட கிளைமேக்ஸ் வரும் என்கிற மனநிலைக்கு கொண்டு வந்துவிருகிறது திரைக்கதை.
இயக்குநர் பொன்ராம் பொறுத்தவரையில் நகைச்சுவைக்கு ஏற்ற கதையை தேர்ந்தெடுத்தாலும், ஒரு ஸ்டிராங்கான வில்லன் பயன்படுத்தியிருப்பதால், அதைத் தாண்டி ஆக்ஷன் கதையை ரசிகர்கள் எதிர்பார்க்க தொடங்குவிடுகின்றனர். அதனால், நகைச்சுவை தாண்டி கதையை எதிர்பார்ப்பதால் படம் எடுபடவில்லை. அதே நேரத்தில் படம் ஆரம்பித்த ஒரு மணி நேரம் பொன்ராம்& விஜய்சேதுபதி கூட்டணி நகைச்சுவையில் சக்கைப்போடு போடுகிறது.
இசை டி.இமான். ஏற்கான கேட்ட அதே ராகம். ஆனாலம் கேட்கலாம். பின்னணி இசை சிறப்பு. குறிப்பாக வில்லனுக்கு என்று தனிஆர்வத்தனம் செய்திருக்கிறார். ஒளிப்பதிவு மாஸ் என்றே சொல்லலாம், பகலில் கரும்பு, மக்காசோளம் காடுகளை காட்டும் அவர், இரவில் கரும்பு காடு காட்டும்போது அவ்வளவு நேர்த்தி ஒளிப்பதிவு உண்மையிலேயே சூப்பர். மொத்தத்தில் டி.எஸ்பியை பெரிய அளவில் எதிர்பார்க்காவிட்டாலும். கண்டிப்பாக வரவேற்ககூடிய படம்தான்.