புருவங்களைச் சரியான வடிவமைப்பில் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவது இயற்கைதான். அவை மிகவும் கவர்ந்திழுக்கக்கூடிய ஒன்றாகும். மோசமான வடிவமைப்பு அல்லது ஐப்ரோக்களை தவறான முறையில் பராமரித்தல் போன்றவை அழகுபடுத்திக் கொள்வதில் சிக்கல்கள் ஏற்பட்டு விடும். புருவ பராமரிப்பு மற்றும் பளபளப்பு பெறுவதற்காக செய்ய வேண்டிய மற்றும் செய்யக் கூடாத தகவல்கள் சிலவற்றைப் பற்றி உங்களுக்கு தனித்துவமாக வழங்குகின்றோம். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
1. தொடர்ந்து பராமரிக்க வேண்டும்:
உங்கள் புருவங்களை அவ்வப்போது வடிவமைத்துக் கொண்டும், தேவையற்ற முடிகளை அகற்றுவதைத் தொடர்ந்து செய்ய வேண்டியது மிக மிக அவசியமாகும். இரண்டு அமர்வுகளுக்கு இடையில் நீண்ட இடைவெளியைக் கொடுத்து விட்டால், புருவம் அதிகம் வளர்ந்து விடும். இது மிகவும் வேதனைக்குரியது மற்றும் புருவங்களைச் சுற்றியுள்ள தோல் பாதிக்கப்படும்.
2. அடிக்கடி செய்யக் கூடாதவைகள்:
எதையும் அதிகப்படியாக செய்யக் கூடாது. மாதத்திற்கு ஒருமுறை செய்வதைவிட அவற்றை அடிக்கடி செய்யும்போது, அவற்றினால் அதிக முடியுதர்தல் மற்றும் சரும அரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும் அபாயமுள்ளது. அதிக நேரம் செலவழிக்கும்போது அதிகப்படியாக புருவங்களை மழித்து விடுவதுண்டு. உங்கள் விருப்பத்திற்கேற்ப வடிவத்தை அமைத்துக் கொள்வதற்கு முன் புருவங்கள் வளர்வதற்கு இரண்டு மாதத்திற்கு அல்லது அதற்கு மேலும் புருவங்களை மழிக்காமல் விட்டுவிடுங்கள்.
3. புருவங்களிலுள்ள முடிகளை அகற்றும் வழிமுறைகள்:
சருமத்திலிருந்து முடிகளை அகற்றுவதற்கு வேக்ஸிங், த்ரெட்டிங், முடியை அகற்றுவது என்ற மூன்று வழிகள் உள்ளன. அவற்றை சரிவர செய்யாவிட்டால் பாதிப்பு ஏற்படுத்தும். இந்த மூன்றில் ஏதாவது ஒரு வழி மற்ற வழியைவிட உங்களுக்கு பொருத்தக் கூடியவையாக இருக்கலாம். எனவே, உங்களுக்கு பொருத்தமான வழியை தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு வழியிலும் அதன் செயல்முறைக்கேற்ப வலிகள் ஏற்பட்டாலும், இறுதியில் புருவங்கள் மிகவும் அழகானத் தோற்றமளிக்கும். எனவே, ஒரு சுகத்தை அனுபவிக்க வேண்டுமானால், அதற்கேற்ற துன்பத்தையும் எதிர்கொள்ள வேண்டும் என்பது நிச்சயம்.
4. அடிக்கடி வழிமுறைகளை மாற்றக் கூடாது:
தொடர்ந்து வழிமுறைகளை மாற்றும்போது ஒவ்வொரு வழிமுறையும் வெவ்வேறாக செயல்படும். உங்களுடைய சருமத்திற்கும், முடிக்கும் பொருத்தமான வழிமுறையை தேர்ந்தெடுத்து, அந்த வழிமுறையை உறுதியாக பின்பற்றுங்கள்.வடிவமைத்தப் பின் குளிர்ச்சி தரும் க்ரீம் அல்லது ஜெல்லை பயன்படுத்துங்கள்முடியை நீக்குவதனால், அரிப்பு மற்றும் சருமம் வறண்டு முடி உதிர்தல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். ஒரு மென்மையான க்ரீம் அல்லது ஜெல் ஆகியன சருமத்தை குளிர்ச்சியாக வைத்திருக்கவும், பிரச்னைகளை தவிர்ப்பதற்கும் உதவியாக இருக்கும்.
இதற்கு கற்றாழை ஜெல்லை முயற்சி செய்து பார்க்கவும். எந்த பொருட்களாவது பாதிப்புகளை ஏற்படுத்துவது என்று உணர்ந்தால் அதைத் தொடராதீர்கள்உங்கள் கண்களைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் மிகுந்த உணர்திறன் கொண்டது, எனவே, உங்கள் புருவங்களை சுற்றி வேக்ஸிங் செய்து கொள்ளும்போது ஏற்படும் எந்தவிதமான எரிச்சல் அல்லது வலியை ஏற்படுத்தினாலும் அல்லது கிரீம் அல்லது ஒப்பனை தயாரிப்புகள் போன்ற ஏதாவது ஒரு குறிப்பிட்ட தயாரிப்பு உங்கள் சருமத்தை பாதித்தாலோ அவற்றை உடனே தவிர்க்கவும்.
5. ஐப்ரோ ஜெல்கள், ஐப்ரோ பென்சில்கள், ஐப்ரோ பவுடர்களை பரிசோதியுங்கள்:
மயிரிழைப் போன்ற வரிகள், சிறிய புருவங்கள் போன்றவற்றை செய்து கொள்ள ஐப்ரோ பென்சில் உங்களுக்கு உதவியாக இருக்கும். முடியின் வளரும் திசையை சீப்பால் சீவி விடுங்கள். ஒரு இயற்கையான தோற்றம் பெறுவதற்கு அதிகப்படியாக இருப்பவைகளை ப்ரஷ்ஷினால் அப்புறப்படுத்தி விடுங்கள். ஒவ்வொரு முறையும் பென்சிலை கூர்மை செய்து கொள்ளுங்கள். இடைவெளிகளை நிரப்புவதற்கு ஐப்ரோ பவுடர்கள் மிக்க உதவியாக இருக்கும். ஜெல்லை பயன்படுத்திய பிறகு பவுடரை பயன்படுத்தும்போது அவை அந்த இடத்திலேயே நன்றாக ஒட்டிக் கொள்ளும். உங்கள் இயற்கையான முடியின் நிறத்திற்கு மாறாக வேறொரு நிறத்தை தடவிக் கொள்ளாதீர்கள்.