கேப்டன் திரை விமர்சனம்
நடிகர்கள்: ஆர்யா, சிம்ரன், ஐஸ்வர்யாலட்சுமி, ஹரீஷ் உத்தமன், மாளவிகா,
இயக்குனர்: சக்தி சௌந்தர்ராஜன்.
இசை : இமான்
தயாரிப்பு ; தி ஷோ பீப்பிள்
இராணுவத்தில் பணிபுரியும் கதையின் நாயகன் வெற்றிச்செல்வன் (ஆர்யா) தனது நண்பர்களுடன் அவருக்கு கொடுக்க பட்ட வேலையை செய்வதற்காக செக்டார் 42 என்கிற வனப்பகுதிக்குச் செல்கிறார். ஆனால் அங்கு எதிர்பாராத விதமாக அவரின் நண்பர்களுள் ஒருவர் இறந்து விடுகிறார். அவர் இறந்தது ஏன்? என்று குழம்பிப்போகிறார். அதற்கு காரணமாக கேப்டன் என்ற முறையில் ஆர்யாவுக்கு இராணுவ நீதிமன்றம் குறைந்தபட்ட தண்டனை தருகிறது. பிறகு சைன்டிஸ்ட் ஆக சிம்ரன் வருகிறார். செக்டார் 42 வில் மனிதர்கள் யாரும் போக முடியாத காரணத்தை விளக்குகிறார். பிறகு சிம்ரனும் இவர்களுடன் இணைந்து செக்டார் 42 என்ற இடத்திற்கு அனைவரும் செல்கிறார்கள். அங்கு இருக்கும் அந்த ஏலியன்களை இவர்கள் அழித்தார்களா? இல்லையா? என்பதும் வெற்றிச்செல்வன் அவருடைய பகையை தீர்த்து நண்பர்களுடன் திரும்பி வந்தாரா? இல்லையா? என்பதுதான் மீதி கதை.
ஒட்டுமொத்தப் படத்திலும் எந்த நடிகரின் நடிப்பையும் மெச்சும்படியாக இல்லை. திரைக்கதையும் பக்கம் விட்டு பக்கம் எழுதியது போன்ற ஒரு தோற்றப்பிழை. கதை சுவரஸ்ம் கூட்டுவதாக இருந்தாலும் திரைக்கதை சொதப்பலால் படம் ஒட்டுமொத்தமாக அடிவாங்குகிறது. இமான் பின்னணி இசை கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறது. யுவாவின் ஒளிப்பதிவு சிறப்பு.