மிளகு தக்காளி கீரை ரசம்!

மணத்தக்காளியை மிளகு தக்காளி என வேறு பெயரிலும் சொல்வதுண்டு. இதில் கருப்பு, சிவப்பு என இரண்டு வகைகள் உள்ளது. இலை, காய், பழம் என அனைத்தும் மருத்துவ பயனுடையது. மணத்தக்காளி கீரையை வளரும் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர், கருவுற்றிருக்கும் பெண்கள், நடுத்தர வயதுடையவர்கள் என அனைவரும் சாப்பிடுவதற்கேற்ற இயற்கை உணவாக இருக்கிறது. வாய் புண்ணை ஆற்றும் மணத்தக்காளி கீரையில் ரசம் செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
வரமிளகாய் – 3
சின்ன வெங்காயம் – 10-15
மணத்தக்காளி கீரை – தேவைகேற்ப
அரிசி கழுவிய நீர் – தேவைகேற்ப

செய்முறை:

வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, சீரகம் சேர்க்கவும். பின் சிறிதாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் அதனுடன் மணத்தக்காளி கீரை மற்றும் அரிசி கழுவிய நீர் சேர்த்து கொதிக்கவிடவும். இப்போது ரசம் தயார்.. இந்த ரசம் கோடை காலத்திற்கு ஏற்றது.. உடலை குளுமையாக வைத்திருக்க உதவும்.