முன்பொரு காலத்தில் சாதி மற்றும் சமய வேற்றுமைகளின்றி திருமணச் சடங்குகளில் தாய் வீட்டு சீதனமாக சமையலறையை அலங்கரித்தது அஞ்சறைப் பெட்டி. இந்தப் பெட்டியில் மஞ்சள், மிளகு, சீரகம், கடுகு, வெந்தயம் முதலிய பொருட்களை உள்ளடக்கியதாக இருந்து. சிலர் பெண்கள் தங்களுடைய வசதிக்கா ஒவ்வொரு பெட்டியிலும் இரண்டு பொருள்களை வைத்து பத்துப் பொருள்களை பயன்படுத்தியும் வந்தனர். இப்போது, பத்துப் பொருள்களையும் ஒரே இடத்தில் வைக்கும் வகையில் பெட்டி வடிவமைத்துள்ளனர்.
1. சீரகம்:
சீரகத்தில் வைட்டமின் -பி இரும்பு, பாஸ்பரஸ், துத்தநாகம் போன்ற சத்துகள் இருக்கின்றன. இதன் பண்புகள் வயிற்றில் இருக்கும் வாயுக்களை அகற்றுவதில் பங்கு வகிக்கிறது. உடலின் சூட்டைத்தனித்து குளிர்ச்சியடையச் செய்கிறது.
2. பெருஞ்சீரகம்:
பெருஞ்சீரகம் என்பது சீரகத்தைப் போன்று இருந்தாலும் இதன் தன்மையானது முற்றிலும் வேறுபட்டது. வைட்டமின் பி-6, காப்பர், பீட்டா கரோட்டீன் ஆகிய உட்டச்சத்துக்கள் இதில் உள்ளன.செரிமானத்துக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது.
3. மிளகு:
வைட்டமின்- பி, ஈ மற்றும் பைப்பரின் ஆகிய சத்துக்களைக் கொண்டது ஆகும். நமது உடலில் இருக்கக்கூடிய உருப்புகளை சமநிலையில் வைப்பதற்கு உதவுகிறது. இது பசியைத் தூண்டக்கூடியது.
4. மஞ்சள்:
மஞ்சளில் ஆல்கலாய்டு என்னும் மூலப்பொருள் மஞ்சளில் இருக்கிறது. இதில் ஆண்டி ஆக்ஸ்டண்ட், வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி உள்ளது. வைரஸுக்கு எதிரானது. நோய் எதிர்ப்பு சக்தியாக செயல் படுகிறது.
5. வெந்தயம்:
இதில் இரும்புசத்துக்கள், மற்றும் ஹீமோகுளோபின் அளவைத் தக்கவைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும்’ இது ரத்தத்தை சுத்திகரிக்க செய்கிறது. முளைகட்டிய வெந்தயம் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கக்கூடியது. நமது உடல் சூட்டைத் தணிக்கிறது. சர்க்கரை நோயாளிக்கு சிறந்த உணவாகும்.
6. கடுகு:
நாம் சமைக்கும் போது தாளிப்பதற்கு முக்கியப் பொருளாக உள்ளது. இதனால் உடலில் இருக்கக்கூடிய நச்சுகள் குறைவதற்கு உதவுகிறது. ரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கு துணைசெய்கிறது. குடல் சம்பந்தமான நோயிலிருந்து பாதுகாக்கிறது.கொத்தமல்லி:
தனியா பித்தத்தைக் குறைப்பதில் முக்கிய பொருளாக இருக்கிறது. கல்லீரல் செயல் பாட்டுக்கு துணைசெய்கிறது.
7. பெருங்காயம்:
மூட்டுகளின் இடையில் இருக்கும் வாயுக்களை வெளியேற்றுவதில் உதவுகிறது. மேலும் இது நரம்புகளைப் பலப்படுத்துகிறது சுவாசப்பிரச்னையில் இருந்து குழந்தைகளைப் பாதுக்காக்கிறது.
8. இலவங்கப்பட்டை:
இலவங்கப் பட்டையில் சினாமிக் ஆசிட் அதிக அளவில் இருப்பதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பான லிஞிலி எனப்படும் கொழுப்பை அகற்றுகிறது. இதயப் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறாது. காய்ச்சல் போன்ற நோய்பாதிப்பால் ஏற்படக்கூடிய உடல் சோர்வை தனிக்கிறது.
9. கிராம்பு
கிராம்பில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கல்லீரல் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலை பாதுகாக்கிறது. உணவில் கிராம்பை சேர்த்து கொண்டு வந்தால் டைப் 1 டயாபெட்டீஸ்யை கட்டுப்பாட்டில் வைக்கிறது.