நாய் சேகர் ரிட்டன்ஸ் திரை விமர்சனம்
நடிகர்கள்: வடிவேலு, ஷிவானி நாராயணன், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்க்ஸ்லி மற்றும் பலர்.
இசை: சந்தோஷ் நாராயணன்
இயக்கம்: சுராஜ்.
ஒளிப்பதிவு: விக்னேஷ் பாபு
தயாரிப்பு: லைகா ப்ரொடக்ஷன்ஸ்
கல்யாணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிவிட்டன இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை என கோவிலுக்கு செல்லும் கணவன், மனைவிக்கு அங்கு இருக்கும் சித்தர் ஒருவர் நாய் குட்டி ஒன்றை கொடுத்து இதை உங்கள் வீட்டில் வைத்து வளருங்கள் நீங்கள் நினைக்கும் அனைத்தும் கண்டிப்பாக நடக்கும் என கொடுக்கிறார். இவர்களும் அந்த நாய்க்குட்டியை வீட்டிற்கு எடுத்து வந்து வளர்க, இவர்களது பிரச்சனை அனைத்தும் சரியாகி செல்வ செழிப்பாக மாறிவிடுகின்றனர். இவர்கள் வேண்டியது போல குழந்தை பிறக்கிறது, அதுதான் நாயகன் வடிவேலு. ஒருநாள் வடிவேலு அப்பாவின் நம்பிக்கை உரியவரே அந்த நாயை எடுத்துச் சென்று பெரிய பணக்காரர் ஆகிவிடுகிறார். வடிவேலு குடும்பம் ஏழையாகி விடுகிறது. இந்நிலையில் தொலைத்த நாயை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டுமென களமிறங்கும் கதாநாயகன் இறுதியாக கண்டுபிடித்தாரா? இடையில் நடந்த குழப்பங்கள் என்ன? இவையே இப்படத்தின் மீதிக்கதை.
நீண்ட இடைவெளிக்குப் பின், அதாவது, மெர்சல் படத்திற்குப் பின்பு என்றுகூட சொல்லலாம். வடிவேலு அவருக்கே உரித்தான நடிப்பில் படமுழுக்க முயற்சி செய்திருந்தாலும் பழைய அந்த திருப்தி இல்லை. காமெடியும் பெரியளவு என்ன சுத்தமாகவே ஒர்க்கவுட் ஆகவில்லை. வடிவேலு தவிர வரும், ஆனந்த்ராஜ் கதாப்பாத்திரம் கொஞ்சம் பரவாயில்லாமல் இருந்தது. இவர்களை தவிர வரும் அணைத்து கதாப் பாத்திரங்களுமே வீணடிக்கப்பட்டுள்ளன என்பதே உண்மை.
விக்னேஷ் பாபுவின் ஒளிப்பதிவில் கலர்ஃபுல் காட்சிகள் அருமை. சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் & பின்னணி இசை இரண்டுமே ஓகே ரகம்தான். இப்படத்தின் குறையாக எதை சொல்வது, காமெடி தான் இப்படத்தின் பேஸ் லைன் ஆனால் ஒன்றிரண்டு இடங்களை தவிர படமுழுக்க எங்கேயுமே காமெடி எடுபடவில்லை, இதுவே நமக்கு பெரிய எமாற்றமாக அமைந்துள்ளது. இரண்டாம் பாதியில் கூட கொஞ்சம் சுவாரஸ்யம் இருந்தாலும், முதல்பாதி சோதனை தான். கதைக்கான ஸ்கோப் ஒன்லைனில் இருந்தாலும் டிராக் ஆக உருவாக்கியது பெரிய மைனஸ். எதையுமே பெரிதாக பயன்படுத்தாமல் மேலோட்டமாக கையாண்டுள்ளார் இயக்குனர் சுராஜ். இறுதியாக படம் எப்படி என்றால்? ரொம்பவே ஆவரேஜ் படம்தாங்க…