கலகத் தலைவன் திரை விமர்சனம்

கலகத் தலைவன் திரை விமர்சனம்

Now Watch Kalaga Thalaivan Review Here

நடிகர்கள் : உதயநிதி, கலையரசன், ஆரவ், நிதி அகர்வால் மற்றும் பலர்
இயக்கம்  : மகிழ்திருமேனி
ஒளிப்பதிவு: தில்ராஜ்
இசை    : ஸ்ரீகாந்த் தேவா
தயாரிப்பு  : ரெட்ஜெயண்ட்

Kalagathalaivan Poster 1 Mellinam Tamil
Kalagathalaivan Poster 1

வஜ்ரா எனும் கார்ப்ரேட் நிறுவனம் அளவான பெட்ரோலில் மைலேஜ் அதிகமாக தரும் வாகனத்தை கண்டுபிடித்து அதனை சந்தையில் அறிமுகம் செய்ய தயாராகிறது. ஆனால், இந்த வாகனத்தில் இருந்து வெளியேறும் புகை சுற்றுச்சூழல் மாசுவை உண்டாக்கும் என்று அதன்பின் தெரியவருகிறது. இந்த விஷயம் வெளியே கசியக்கூடாது என்று வஜ்ரா நிறுவனத்தின் உரிமையாளர் விஷயத்தை தெரிந்தவர்களிடம் கூறுகிறார். ஆனால், எப்படியோ இந்த விஷயம் எதிரி நிறுவனத்திடம் கசிந்து விடுகிறது. இதனால், வஜ்ரா அறிமுகம் செய்த இந்த வாகனத்தின் மேல் பல விமர்சனங்களும்,  நிறுவனத்தின் பங்குச்சந்தையில் சரியத்  துவங்குகிறது. ஏற்கனவே நட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் வஜ்ரா நிறுவனத்திற்கு மேலும் இந்த அடி விழுகிறது. தன்னுடைய போட்டி நிறுவனத்திற்கு இந்த விஷயத்தை கசிய வைத்தது யார் என்று கண்டுபிடிக்க வஜ்ரா நிறுவனத்தின் உரிமையாளர் மூலம் நியமனம் செய்யப்படுகிறார் ஆரவ்.
அடிமட்டத்தில் இருந்து இதை கொடூரமான முறையில் விசாரித்து ஒவ்வொருவரிடமும் இருந்து பல உண்மைகளை வாங்கி வரும் ஆரவ், இறுதியில் இந்த அனைத்து கலகத்திற்கும் காரணம் யார், இந்த ரகசியங்களை வைத்து அந்த மர்ம நபர் என்ன செய்கிறார்? ஏன் செய்கிறார்? இதற்கும் உதயநிதிக்கும் என்ன சம்மந்தம்? என்பதே படத்தின் மீதி கதை..

Kalagathalaivan Poster 2 Mellinam Tamil
Kalagathalaivan Poster 2

கலகத் தலைவன் கதாநாயகனாக நடித்துள்ள உதயநிதி ஸ்டாலின் நடிப்பு ஓகே. கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பையும், மிரட்டலான ஆக்ஷனையும் அசால்டாக செய்துள்ளார். வில்லனாக வரும் ஆரவ் அனைவரையும் மிஞ்சும் அளவிற்கு நடித்துள்ளார். ஒவ்வொருவரையும் தேடி தேடி கொடூரமாக வேட்டையாடும் ஆரவ்வின் நடிப்பு படத்திற்கு பலம்.கதாநாயகியாக வரும் நிதி அகர்வால் எதற்காக படத்தில் இருக்கிறார் என்று தெரியவில்லை. முக்கிய வேடத்தில் தோன்றியுள்ள கலையரசனின் நடிப்பு ஓகே. மகிழ் திருமேனி எடுத்துக்கொண்ட கதைக்களத்திற்கு பாராட்டு. கதாபாத்திரங்களின் வடிவமைப்பு அற்புதம். சிறு சிறு விஷயத்தை கூட குறிப்பிட்டு காட்டும் மகிழ் திருமேனியின் இயக்கத்திற்கு கைத்தட்டல்கள். இடைவேளை காட்சி மாஸ். ஆனாலும், தடம் எனும் மாபெரும் வெற்றிக்கு பின் மகிழ் திருமேனி இயக்கியுள்ள இப்படம் சற்று ஏமாற்றத்தை தந்துள்ளது. எதிர்பார்ப்புக்கு நிகரான விறுவிறுப்பு சற்று குறைவு. திரைக்கதையில் சுவாரஸ்யத்தை அதிகரித்து இருக்கலாம். மகிழ் திருமேனியின் திரைக்கதை தானா இது என சந்தேகம் எழுகிறது. ஆக்ஷன் காட்சிகள் பிரமாதம். அதே போல் இடைவேளை காட்சியின் வடிவமைப்பு சூப்பர். முக்கியமாக தில்ராஜின் ஒளிப்பதிவு படத்தை தாங்கி நிற்கிறது. அதற்கு தனி பாராட்டுக்கள். ஸ்ரீகாந்த் தேவாவின் பாடல்கள் ஈர்க்கவில்லை. பின்னணி இசை படத்திற்கு மேலும் பலத்தை சேர்க்கிறது. இந்தக் கலகத் தலைவனை கழகத் தோழர்கள் மட்டுமே கொண்டாட முடியும்.