Vikram’s New Film “Cobra” Movie Review | கோப்ரா திரை விமர்சனம்

கோப்ரா திரை விமர்சனம்

நடிகர்கள் : விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி,கே.எஸ் ரவிகுமார், ரோஷன், மிர்னாளினி ரவி, இர்பான் பதான்
இயக்கம்  : அஜய் ஞானமுத்து
இசை    : ஏ.ஆர். ரகுமான்
தயாரிப்பு  : லலித்ஸ்ரீகுமார்

பணத்துக்காக உலக நாடுகளில் உள்ள முக்கிய புள்ளிகளை கொலை செய்கிறார் விக்ரம். யார் கொலை செய்தார், எதற்காக கொலை செய்தார் என ஆதாரங்களை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு கணிதம் மூலம் கணக்கு போட்டு ஒவ்வொருவரை கொலை செய்கிறார். இந்த கொலைகளை செய்யும் விக்ரமை கண்டுபிடிக்க இஃபார்ன் பதான் இன்டர்போல் அதிகாரியாக வருகிறார். கொலை விசாரணையை தவறாக செய்து வருகிறீர்கள் என்று இஃபார்ன் பதானுக்கு உதவியாக வருகிறார் மீனாட்சி. கணிதத்தில் புத்திசாலியான மீனாட்சி இந்த அணைத்து கொலைகளுக்கும் மூலதனமாக கணிதம் ஒன்று தான் இருக்கிறது என கண்டுபிடிக்கிறார்.

Cobra Review Mellinam Tamil
Cobra Review

இதை வைத்து விக்ரம் ஒரு கணிதம் அறிந்த கொலையாளி என்ற பாதையில் விசாரணை செல்கிறது. இது ஒரு புறம் சென்றுகொண்டிருக்கும் நிலையில் மற்றொரு புறம் விக்ரமின் பின்னணியில் இருந்து யார் அவரை செயல்படுத்துவது என்பதை உலகிற்கு தெரியப்படுகிறார் ஹாக்கர். இதன்பின் சற்று தடுமாறும் விக்ரமுக்கு அடுத்தடுத்து பல எதிர்பாரா திருப்பங்கள் காத்திருந்தது. அதை எல்லாம் அவர் எப்படி எதிர்கொண்டார்.. இந்த கொலைகள் எல்லாம் பணத்துக்காக தான் விக்ரம் செய்கிறாரா? புதிதாக கதையில் முளைத்த இந்த ஹாக்கர் யார்? இந்த அணைத்து விஷயங்களுக்கும் பின்னணியில் இருக்கும் வில்லன் யார் என்பதே படத்தின் மீதி கதை..

சீயான் விக்ரம் நடிப்பில் பட்டையை கிளப்பியுள்ளார். குறிப்பாக போலீஸ் விசாரணை காட்சியில் திரையரங்கத்தை தெறிக்கவிட்டுவிட்டார் என்று தான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு கைதட்டல்களை தன்வசப்படுத்தியுள்ளார் விக்ரம். கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டியின் கதாபாத்திரம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களை கவரவில்லை. மிர்னாலினி ரவி மற்றும் மீனாட்சி இருவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார்கள். விக்ரமின் சிறு வயது கதாபாத்திரம் படத்திற்கு பலம். அதே போல் விக்ரமின் இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்துள்ள சர்ஜன் காலித்தின் நடிப்பும் சூப்பர். இன்டர்போல் அதிகாரியாக நடித்துள்ள இஃபார்ன் பதான் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை அளவாகவும் அழகாகவும் கொடுத்துள்ளார்.

Cobra Review Mellinam Tamil
Cobra Movie Poster

இயக்குனர் அஜய் ஞானமுத்து எடுத்துக்கொண்ட கதைக்களம் சூப்பர். ஆனால், இயக்கமும் திரைக்கதையும் சற்று சொதப்பல் ஆகியுள்ளது. குறிப்பாக படத்தின் முதல் பாதி எப்போது நிறைவடையும் என்ற அளவிற்கு சலிப்பை ஏற்படுத்துகிறது திரைக்கதை. இடைவேளை காட்சியால் முதல் பாதியின் சலிப்பை பொறுத்துக்கொள்ள வேண்டியதா உள்ளது. ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசையும், பாடல்களும் வேற லெவல். ஆனால், தரங்கிணி மற்றும் தும்பி துள்ளல் பாடல்கள் படத்தின் வேகத்திற்கு தடையாக இருக்கிறது. ஜான் ஆபிரகாம், பூவன் ஸ்ரீனிவாசனின் எடிட்டிங் ஓகே. ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவு ஓரளவு படத்தை தாங்கி நிற்கிறது.