வரலாறு முக்கியம் திரை விமர்சனம்
நடிகர்கள் : ஜீவா, காஷ்மிரா, பிரக்யா, விடிவி கணேஷ், கே.எஸ். ரவிகுமார், சரண்யா,
இயக்கம் : சந்தோஷ் ராஜன்
இசை : ஷான் ரகுமான்
தயாரிப்பு : சூப்பர்குட் ஃபிலிம்ஸ்
கோயம்புத்தூரில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் கதாநாயகன் ஜீவா {கார்த்தி} சொந்தமாக ஹ்ஷீutuதீமீ சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த சமயத்தில் ஜீவாவின் வீட்டிற்கு பக்கத்தில் ஒரு மலையாள குடும்பம் குடியேருகிறது. இந்த குடும்பத்தில் இருக்கும் இரு இளம் பெண்கள் காஷ்மிரா மற்றும் பிரக்யா.
இதில் கதாநாயகன் ஜீவா அக்கா காஷ்மிராவை காதலிக்கிறார். தங்கை பிரக்யா ஜீவாவை காதலிக்கிறார். ஆனால், காஷ்மீரின் அப்பா தனது மகளை துபாய் மாப்பிள்ளைக்கு மட்டுமே கட்டிக் கொடுப்பேன் என உறுதியுடன் இருக்கிறார்.இறுதியில் யாருடன் ஜீவா இணைந்தார் என்பதே படத்தின் மீதி கதை..
எப்போதுமே பக்கத்து வீட்டு பையன் போல இருக்கும் “ஜீவா”வின் தோற்றம் இக்கேரக்டருக்கு பக்காவாக பொருந்தியிருக்கிறது. அவருடைய இயல்பான நடிப்பின் மூலம் காதலிலும், காமெடியிலும் கலக்கியிருக்கிறார். நடனம், காமெடி, காதல், ரொமான்ஸ் என எல்லா ஏரியாவிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ஜீவா.நாயகியாக வரும் கஷ்மிராவிற்கு ஒரு நல்ல ரோல் அதை கச்சிதமாகவும், ரசிக்கும் படியாகவும் செய்திருக்கிறார்.
கே.எஸ்.ரவிக்குமாரின் நடிப்பு படத்திற்கு தேவையான அளவு அமைந்திருப்பது சிறப்பு. நீண்ட இடைவேளைக்குப் பிறகு வி.டி.வி கணேஷிற்கு ஒரு தரமான கதாபாத்திரம், நகைச்சுவை கலந்து அதை ரசிக்கும் படியாக செய்து அசத்தியிருக்கிறார். மேலும் சரண்யா பொன்வண்ணன், மொட்டை ராஜேந்திரன் ஆகியோருடைய கலகலப்பான நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
ஜிமிக்கி கம்மல் பாடல் புகழ் “ஷான் ரஹ்மானி”ன் பாடல்கள் சுமார் என்றாலும், புத்துணர்ச்சியான பின்னணி இசை பல காட்சிகளை ரசிக்க வைக்கிறது.தமிழ் ரசிகர்கள் நிறைய பார்த்து சலித்த கதை என்றாலும் கூட,ஒரு நல்ல கமர்சியல் படத்திற்கான திரைக்கதையை அமைத்து அதில் காமெடி கலந்து வழங்கியிருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் ராஜன். படத்தின் நீளம் படத்திற்கு சற்று தடையாக அமைந்திருக்கிறது.சில அடால்ட் வசனங்களை தவிர்த்திருந்தால் குடும்பங்கள் ரசிக்கும் ஒரு படமாக வரலாறு முக்கியம் அமைந்திருக்கும்.