மூலைக்கு மூலை முளைத்திருக்கும் பியூட்டி பார்லர்களின் வருகை, அழகு பதுமைகளுக்குக் கூடுதல் அழகூட்டியது மட்டுமின்றி குடும்பம், குழந்தை என சிறுவட்டத்துக்குள் வாழ்ந்த பெண்களை சிறகு விரித்து உலகை காண வைக்கும் தொழிலாகவும் மாறி உள்ளது. குறைந்தபட்ச தொழில் நுணுக்கத் திறனும், அழகுக் கலை மீதான காதலும் இருந்தாலே அவர்களை தொழில் முனைவோர்களாக்கி அழகு பார்க்கிறது அழகு நிலையத் தொழில். இத்தொழிலை தொடங்குவதற்கான பயிற்சிக்கு வழிகாட்டுகிறார் திருமதி. யோகலட்சுமி உதயக்குமார். இவர், சென்னை, செங்குன்றத்தில் இயங்கி வரும் ‘அட்ஸ்வா பியூட்டி அகடாமி’ நிறுவனத்தில் அழகுக்கலை பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த மூன்றாண்டுகளில் 300 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பயிற்சி கொடுத்திருக்கிறார். சிலருக்கு பெரிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வாங்கித் தந்திருக்கிறார். அவரை ஒரு மாலைப்பொழுதில் சந்தித்து உரையாடியபோது…
“என்னோட பூர்வீகம் தாம்பரம்,படப்பை கரசங்கால் எம்.ஜி.ஆர் நகர். அப்பா எம்.ஆர். கண்ணன் அரசியல்வாதி மற்றும் பொதுநலத் தொண்டர். அம்மா சரோஜா கண்ணன் இல்லத்தரசி. கட்டுப்பாடான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தேன். அம்மாதான் எனக்கு உலகம். எனக்கு என்ன தேவையோ அதை உடனே செய்துவிடுவார். என் உடன் பிறந்தவர் ஒரு அக்கா, ஒரு அண்ணன். கட்டுப்பாடான குடும்பம் என்று சொன்னதற்கு காரணம். நாங்கள் மேக்கப் போட்டால் எங்க அப்பாவிற்கு பிடிக்காது. அப்பாவிற்கு மேக்கப்பே பிடிக்காது என்றால், மேக்கப் தொடர்பான படிப்பு படிப்பிற்கு ஓத்துக்கொள்வாரா? ஒத்துக்கவே மாட்டார் என்று தெரியும். ஆனால். அந்தப் படிப்புதான் எனக்கு பிடித்திருந்தது.
என் அம்மாவிடம் சொன்னேன். உனக்கு பிடிச்சத செய். அப்பாவிடம் படிப்புக்காக வெளியே போனாதாக சொல்லிக்கொள்கிறேன் என்று ஒத்துழைப்பு கொடுத்தார். அக்காவும் அப்பாவிடம் சொல்லமாட்டேன் என்று வாக்குறுதி தந்தார். அப்போதுதான் ‘ஹேண்டின் ஹேண்ட்’ என்கிற மகளிர் குழுவின் உதவியால் பேசிக் பியூட்டிசியன் கற்றுக்கொண்டேன். அதே குழுவுடன் இணைந்து சின்ன சின்ன நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கான குரூமிங் மேக்கப்செய்வது தொடர்பாக கற்றுக்கொள்ளவும் செய்தேன். குரூமிங் மேக்கப் என்றால், ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் பெண்கள் லுக்காக தெரிய தாங்களாக எளிமையான மேக்கப் செய்துகொள்ளும் கலை.
அதன்பின்பு, 2009 ம் ஆண்டு அண்ணாநகரில் உள்ள க்ரீன் ட்ரெண்ட் அழகுக்கலை பள்ளியில் ஆறுமாத மேக்கப் கலை தொடர்பான டிப்ளோமோ படித்தேன். அதன்பின்பு எனக்கும் உதயக்குமார் என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின்பு சென்னை,செங்குன்றத்தில் வசித்து வருகிறோம். என் கணவர் என்னை அவ்வளவு அன்பாக கவனித்துக்கொள்கிறார். எனக்கு நண்பராகவும் ,வழிகாட்டியாகவும் இருக்கிறார். சுருக்கமாக சொல்லப்போனால், சுதந்திரமாக சிந்திக்க வைத்தார். எங்களுக்கு அமர்நாத், ஸ்ரீஹரிணி என இரண்டு பசங்க உள்ளனர்.
பசங்க வளர்ந்த பின்பு.. தெரிந்த மேக்கப் கலையை வீட்டின் அருகே உள்ளவர்களுக்கு மற்றும் தோழிகளுக்கு செய்துகொண்டிருந்தேன். அந்த லீடில், திருமண மேக்கப் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. ஒன்றன்பின் ஒன்றாக நிறைய திருமண மேக்கப் வரத் தொடங்கியது. திருமண மேக்கப் என்றால், என்னை அழைக்கும் அளவுக்கு புகழ்பெற்றிருந்தேன். ஆனாலும் எனக்கு இன்னும் சிறப்பாக கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. அதனால், 2018 ம் ஆண்டு ‘நேஷனல் இன்ஸ்யூட் ஆஃவ் ஓப்பன் ஸ்கூல்’ ல் சேர்ந்து பியூட்டிசன் தொடர்பான கூடுதல் தொழில்நுட்பக் கலையைக் கற்றுக்கொண்டேன். அப்போது, தமிழரசி என்பவரின் மூலமாக ‘ஜோதி’ என்கிற தோழியின் அறிமுகம் கிடைத்தது. அவர், என்னை அட்ஸ்வா அறக்கட்டளை நிறுவனத்திடம் அறிமுகப்படுத்தி வைத்தார். அதன்பின்பு, எனது வாழ்வியலில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. பெண்களின் வாழ்க்கை தரம் உயர்வுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற என்னுடைய கனவுக்கான ஓர் இடம் கிடைத்தது. என் வாழ்வியலின் அடுத்தகட்டப் பயணத்திற்கு தயாரானேன்.
ஆம்.. அட்ஸ்வா அறக்கட்டளையின் நிறுவனர் திரு. சேவா. செல்லத்துரை சார், நம்ம நிறுவனமும் ஸ்மைல் பவுண்டேசனும் இணைந்து பியூட்டிசன் அகடாமி நடத்த திட்டமிட்டுள்ளோம். அதற்கான பயிற்சி ஒன்று மும்பையில் நடத்துகின்றனர். அதற்கு சென்று வரவேண்டும். இந்த அகடாமியையும் பொறுப்பேற்று நடத்தவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அவர் எனக்கு தந்த நல்ல வாய்ப்பை தவறவிடக்கூடாது என்று நினைத்தேன். என் கணவரிடம் அனுமதி கேட்டேன். அவர், உனக்கு தனித்து இயங்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது தாராளமாக செய் என்று அனுமதி கொடுத்தார். கணவரின் ஆசியோடு மும்பை சென்றேன். அங்கே, பிலிப்ஸ் நிறுவனம் எங்களுக்கு தேவையான பயிற்சியை வழங்கியது. பயிற்சி முடித்து சென்னை வந்ததும் அகடாமி ஏற்படுத்துவதில் சிக்கல் உருவானது. அதாவது, கொரோனா வந்து சேர்ந்தது. ஸ்மைல் பவுண்டேசன். அந்தப் பயிற்சித் திட்டத்தை தள்ளி வைத்தது. அப்போது, செல்லத்துரை சார் ஒரு முடிவெடுத்தார். அட்ஸ்வா பெயரில் ஒரு பியூட்டி அகடாமியை நாமே நடத்தலாம். அந்தப் பொறுப்பை நீங்களே செய்யுங்கள் என்று முழுமையான அங்கீகாரம் கொடுத்தார்.
அவர் எனக்குக் கொடுத்த அந்த வாய்ப்பை சவாலாக ஏற்றுக்கொண்டு களத்தில் இறங்கினோம். ஒரு பேட்ஜ்க்கு 40 பேர் டார்கெட் வைத்து, அட்ஸ்வா நிறுவனத்தின் மொபைலைசேஷன் குழுவுடன் இணைந்து வேலைசெய்ய தொடங்கினோம். ஆனால், ஒரு பேட்ஜ்க்கு எங்களால் 20 பேர் மட்டுமே சேர்க்க முடிந்தது. அதற்கு கொரானா பரவல் முக்கிய காரணம். ஆனால்,20 பேர் எண்ணிக்கை பேஜ்ஜில் 5 பேஜ் முடித்து அனுப்பி வைத்திருக்கிறோம். எங்களால் பயிற்சி பெற்ற பெண்கள் பெங்களூர், ஹைதரபாத், சென்னை என பல இடங்களில் பெரிய அழகுக்கலை நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். சில பெண்கள் வீட்டிலேயே சுயதொழிலாகவும் செய்து வருகின்றனர்.
எங்களிடம் படிக்கும் பெண்களின் தரத்தை உயர்த்துவதற்காகவும், வாய்ப்புகள் எளிமையாக அமைவதற்காகவும் மேக்கப் கலை சார்ந்த ஃபேஷன் காட்சி ஒன்றை சென்னை, விஜய் பார்க் ஓட்டலில் நடத்தினோம். இந்தக் காட்சியை ஒவ்வொரு ஆண்டும் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். எங்களுடைய பயிற்சி நிறுவனத்தில் சேர 18 வயதிற்கு மேல் உள்ளவர்களையும், 10tலீ கல்வி தகுதியாகவும் நிர்ணயித்திருக்கிறோம். மூன்று மாத டிப்ளோமா பயிற்சியில் காஸ்மெட்டாலஜி கோர்ஸ், மேக்கப் பேசிக் மற்றும் அட்வான்ஸ்டு. செல்ப் குரூமிங், திரெட்டிங், வேக்ஸிங், ஸ்கின் அனடாமி, டைப்ஸ் ஆஃப் ஃபேஸியல், பெடிஹியூர், மனிஹியுர், ஹேர் கலர் , 9 டைப்ஸ் ஆஃப் ஹேர்கட் மற்றும் பிரைடல் மேக்கப், பார்ட்டி மேக்கப், சீமந்த மேக்கப், மெஹந்தி, மரூ ரிமூவ் உட்பட பல கலைகளைச் சொல்லித் தருகிறோம்” என்கிறவர், பெண்கள் மற்றவர்களிடம் கூனி குறுகி நிற்காமல் சுயமாக தொழில் செய்யும் வாய்பையும் ஏற்படுத்தி தருவதாகவும் கூறுகிறார். மேலும், அவர் கூறும்போது… மேக்கப் என்பது பெண்களுக்கு அழகு மட்டும் சார்ந்த ஒன்றல்ல. அது தன்னம்பிக்கை சார்ந்தது. மற்றவர்களிடம் நேருக்கு நேர் நிமிர்ந்து பேசும் ஒரு பேச்சுக்கலையை மேக்கப் கொடுக்கிறது.
“மூன்று மாத டிப்ளோமா பயிற்சியில் காஸ்மெட்டாலஜி கோர்ஸ், மேக்கப் பேசிக் மற்றும் அட்வான்ஸ்டு. செல்ப் குரூமிங், திரெட்டிங், வேக்ஸிங், ஸ்கின் அனடாமி, டைப்ஸ் ஆஃப் ஃபேஸியல், பெடிஹியூர், மனிஹியுர், ஹேர் கலர் , 9 டைப்ஸ் ஆஃப் ஹேர்கட் மற்றும் பிரைடல் மேக்கப், பார்ட்டி மேக்கப், சீமந்த மேக்கப், மெஹந்தி, மரூ ரிமூவ் உட்பட பல கலைகளைச் சொல்லித் தருகிறோம்”
Mrs. Yogalakshmi Udayakumar
ஒவ்வொரு நடிகை மற்றும் நடிகர்களின் அழகுக்குப் பின்னால் இந்த மேக்கப் கலை பிணைந்திருக்கிறது. அதனால், மேக்கப் கலையை தொழிலுக்காக மட்டுமல்ல சுயமாக செய்துகொள்ளவும் கற்றுக்கொள்ளலாம். நேரடியாக வந்து கற்றுக்கொள்ள நேரம் மற்றும் வாய்ப்பு கிடைக்காதவர்கள் ஆன்லைன் மூலமாகவும் கற்றுக்கொள்ளலாம்“ என்று மேக்கப் இதழோடு புன்னகை செய்கிறார் திருமதி. யோகலட்சுமி. அட்ஸ்வா பியூட்டி அகடாமியில் பயின்று இப்போது அழகுக்கலை நிறுவனங்களில் பணியாற்றும் சில மாணவிகள் கூறிய கருத்துக்களைப் பார்ப்போம்.
“ அட்ஸ்வா நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட அழகு கலை பாடத்திட்டம் எனது கேரியருக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நான், இப்போது சென்னை, அண்ணாநகரில் உள்ள ஒரு புகழ்பெற்ற அழகுக்கலை நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். நிச்சயமாக அட்ஸ்வா நிறுவனத்தின் பாடத்திட்டத்தை அனைவருக்கும் பரிந்துரைக்கிறேன்”- சரஸ்வதி. ஙி
“அட்ஸ்வா பியூட்டி அகாடமியில் கற்றல் அனுபவமாக மிக சிறந்த அனுபவமாக அமைந்தது. என்னைப் போன்ற மாணவிக்கு யோகலட்சுமி மேம் மிக பொறுமையாகவும் மற்றும் ஒவ்வொரு சந்தேகங்களுக்கு தெளிவாகப் பதில் சொன்னதை எப்போதும் மறக்க முடியாது. என் வாழ்க்கையில் நான் கற்ற பொக்கிஷம். இப்போது, பெங்களூரு, ஒரு புகழ்பெற்ற பியூட்டி நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன்” – ஜெரினா
எனது கல்லூரிப் படிப்பை முடித்து 3 மாதங்கள் அழகுசாதனப் படிப்பைக் கற்றுக்கொண்டதும், அட்ஸ்வா அகாடமியில் ஒரு மாணவராக இருந்ததும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அழகுக்கலை படிப்பு முடித்ததும் எனது வீட்டின் அருகில் சலூன் ஃபார்லர் திறந்துள்ளேன். இந்த படிப்பு எனது வாழ்வில் ஒரு வெற்றிகரமான தொழில்முனைவோராக மாற்றியுள்ளது”- இலக்கியா. (Ph – 8072097997, Instagram: mrsyogalakshmi-hairmakeup).