கருப்பு கவுனி அரிசியில் விதவித விதமாக சமைக்கலாம் வாங்க!

கருப்புக்கவுனி கீர் Mellinam Tamil
கருப்புக்கவுனி கீர்

கருப்புக்கவுனி கீர்

தேவையான பொருட்கள்:

கருப்புக்கவுனி அரிசி
பாதாம் – 3
முந்திரி – 3
ஏலக்காய் – 2
தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி
தேங்காய் – அரை முறி

செய்முறை:-

  1. முதல் நாள் இரவே அரிசியையும் பாதாமையும் தனித்தனியாக ஊறவைக்கவும்
  2. அரிசி,தேங்காய் ஏலக்காய் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்
  3. பாதாமை தோலுரித்து அதனுடன் முந்திரி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  4. தங்களது ரசனைக்கேற்ப நாட்டு சக்கரையோ, பனைவெல்லமோ சேர்த்துக் கொள்ளலாம்
  5. மண் குடுவையில் சிறிது நேரம் ஊற்றி வைத்து அருந்தலாம்
  6. சிறந்த காலை உணவாகும்

கருப்புக் கவுனி இனிப்பு அவல்

அரிசியை விட அவல் உடனடி ஆற்றல் கொடுக்கக் கூடியது இதிலும் விதம் விதமாக சமையல் செய்யலாம் எடை குறைப்பிலும் வயிற்றுப் புண்ணிலிருந்தும் உடனடியாக நிவாரணம் அளிக்கக் கூடியது. எளிதில் சமைக்கலாம்.

கருப்புக் கவுனி இனிப்பு அவல் Mellinam Tamil
கருப்புக் கவுனி இனிப்பு அவல்

தேவையான பொருட்கள்:-

கருப்புக் கவுனி அவல் 1கப் துறுவிய தேங்காய் – 1கப் ஏலக்காய் – 2
நாட்டுச் சக்கரை – தங்களுக்கு தேவையான அளவு

செய்முறை:-

  1. கவுனி அவலை சிறிது நேரம் ஊற வைக்கவும்
  2. அதனுடன் நாட்டு சக்கரை துறுவிய தேங்காய் சேர்க்கவும்
  3. ஏலக்காயை பொடித்து சோ;க்கவும்
  4. அரை மணி நேரம் ஊற வைத்து சாப்பிட மிகவும்அருமையாக இருக்கும்
  5. இந்த அவலையே நீரில் ஊற வைப்பதை காட்டிலும் தேங்காய் பால், காரட் சாறு, பீட்ருட் சாறு, இளநீர்; இவற்றில் ஊறவைத்து இதே போன்று செய்து உண்ணலாம்.

கருப்புக் கவுனி கார அவல்

கருப்புக் கவுனி கார அவல் Mellinam Tamil
கருப்புக் கவுனி கார அவல்

தேவையான பொருட்கள்:-

கருப்புக் கவுனி அவல் – 1கப்
துறுவிய தேங்காய் – 1கப்
இந்துப்பு – தேவைக்கேற்ப
புதினா, கொத்துமல்லி – சிறிதளவு
மிளகு சீரகத்தூள் – தேவையான அளவு
எலுமிச்சை சாறு – சிறு துளிகள்
கேரட் – நறுக்கியது கொஞ்சமாக
சோளம் – வேக வைத்தது (தேவையென்றால்)

செய்முறை:-

  1. கவுனி அவலை சிறிது நேரம் ஊற வைக்கவும்
  2. அதனுடன் நறுக்கிய கேரட், வேக வைத்த சோளம்
  3. இந்துப்பு தேவையான அளவு சேர்க்கவும்
  4. ஏலுமிச்சை சாறு சோ;க்கவும்
  5. மற்ற எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்து ஊற வைத்து உண்ணலாம்
  6. இதையும் இளநீரில், தேங்காய் பாலில் ஊற வைத்து செய்யலாம் சுவையுடன் இருக்கும்;
  7. எலுமிச்சைக்கு பதிலாகவோ அல்லது அதனுடன் சிறிது
    நெல்லித் துறுவல், இஞ்சி துறுவல் சேர்த்தால்
    சுவை கூடுதலாக இருக்கும்
  8. தினா, கருவேப்பிலை, கொத்துமல்லி சாறிலும்
    ஊற வைத்து இதே போன்றே செய்யலாம்

கருப்பு கவுனி அவல் செய்ய செய்முறை விளக்கத்திற்கு எழுதியவுடன் வீட்டில் அவல் தீர்ந்து விட்டது. இணையத்திலிருக்கும்படங்களை தரவிறக்கம் செய்ய மனமில்லை. என்னுடையதோழி சோபனாவை அழைத்து தயக்கத்துடன் கேட்டேன் சுமையல் செய்து போட்டோ அனுப்ப முடியுமா? என்றுஅக்கா நாளை காலை எங்கள் வீட்டில் கருப்புக் கவுனி என்று அழகாக புகைப்படம் எடுத்து அனுப்பிவிட்டார்;. தங்களைப் போன்ற நண்பர்களால் வாழ்க்கை இன்னும் அழகாகிறது.நன்றி தோழியே!!! இன்னும் கவுனி கஞ்சி, களி, இடியாப்பம், புட்டு, கொழுக்கட்டை என்று என்னுடன் கரம் கோர்த்துக் கொள்ள வாருங்கள் நண்பர்களே!!!