ஆண்டு முழுவதும் குளிர்ச்சி தரும் ‘கொழுக்குமலை’

ஆண்டு முழுவதும் குளிர்ச்சி தரும் ‘கொழுக்குமலை’ - மெல்லினம் தமிழ்

உலகத்திலேயே மிக உயரமான இடத்தில் தேயிலை விளையும் ஒரே இடம்தான் கொழுக்குமலை. ஆண்டு முழுவதும் குளிர்ந்தே இருக்கும் மலைகளின் பட்டியலிலும் இப்பிரதேசம் இடம்பெற்றுள்ளது. இந்தக் கொள்ளை அழகு கொண்ட குளு குளு கொழுக்குமலை அமைந்திருப்பது தமிழகத்தில் தேனியை ஒட்டிய மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியில்தான். தேனி-, போடி கடந்து மூணாறு சாலையில் பயணித்தால் பசுமையை ரசித்தபடி வளைந்து நெளிந்து செல்லும் போடி மெட்டுசாலை. இங்கே குளிர் நம்மை ஒட்டிக்கொள்ளும் பரவசம்,

இதமாக போடி மெட்டு கடந்து பசுமைப் பயணம் என பல அம்சங்களைக் கொண்டுள்ள கொழுக்குமலையில் வேறென்னவெல்லாம் உள்ளது என பார்க்கலாம். தேயிலை மலைத்தோட்டம் நிறைந்த பூப்பாறை கடந்து பெரிய கானல், சின்னக்கானல், அதனருகே ரம்மியமான பரந்து விரிந்து கிடைக்கும் டேம்தான் யானை இரங்கல் டேம். தேக்கடிபோல் தேயிலை மலைகளின் காலடியில் வளைந்து வளைந்து செல்லும் நீண்ட நீர்த்தேக்க அணை. இதனைத் தொடர்ந்து, அடுத்த ஒரு சில கிலோ மீட்டரில் உள்ளது சூரியநெல்லி. கொழுக்குமலைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் நுழைவுவாயில்தான் இந்த சூரியநெல்லி.

உயரமான மலைச் சாலை சூரியநெல்லியில் இருந்து கொழுக்கு மலைக்கு ஜீப்பில்தான் செல்லமுடியும். அவ்வளவு உயரமான மலைச்சாலை. சுற்றியுள்ள சில மலை கிராமங்களுக்கு இன்றைக்கும் குதிரை சுமையாகத்தான் உணவுப்பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. கொழுக்குமலைக்குச் செல்வதற்கு முன் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தேயிலைத் தோட்டங்கள்தான் மலையை ஆக்கிரமித்துள்ளது. அந்த பசுமையோடு குளிர்ந்த மேகக் கூட்டம் நம்மோடு கொஞ்சி விளையாடிக் கொண்டே வரும். அவ்வப்போது சாரல் மழையும் நம்மை கரைந்துவிடச் செய்யும்.

ஆண்டு முழுவதும் குளிர்ச்சி தரும் ‘கொழுக்குமலை’ - மெல்லினம் தமிழ்

இந்த மலையில் விளையும் தேயிலை உலக அளவில் ஏற்மதி செய்யப்படுகிறது. இயற்கை முறைப்படி தயாராகும் இந்த தேயிலை உற்பத்தியை சுற்றுலாப் பயணிகள் தேயிலைத் தொழிற்சாலைக்குள் சென்று கூட பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்கும். ஆண்டு முழுவதும் இப்பகுதியில் தேயிலை உற்பத்தி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கும். குளுகுளு கொழுக்குமலை தமிழகத்தில் எந்தப் பகுதி வெயிலில் வாடினாலும் இந்த கொழுக்குமலை தனது காலநிலையில் எவ்வித மாற்றமும் இன்றி ஜில்லென்ற சூழலையேக் கொண்டுள்ளது. இங்கு ஆண்டுதோறும் குளிர்ச்சி மட்டுமே நிலவும். வெயிலைப் பார்க்கவே முடியாது. இதற்காகவே இங்கு ஆண்டுதோறும் பெருமளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம்.

தமிழகம் மற்றும் கேரளத்திற்கு இடையே இரு எல்லைகளையும இணைத்தவாறு உள்ள கொழுக்குமலை தமிழ், மலையாள சினிமாவில் முக்கிய ஷூட்டிங் ஸ்பாட்டாக திகழ்கிறது. நீங்கள் மைனா படம் பார்த்திருந்தீர்கள் என்றால் தெரிந்து கொள்ளுங்கள், அந்தப் படம் முழுவதும் இங்கேதான் எடுக்கப்பட்டது என்று. இரு மாநில எல்லைப் பகுதி என்பதால் இரு மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் வருவார்கள். சிறந்த தேயிலை அட்டகாசமான தேயிலைத் தோட்டங்கள் இங்கு உள்ளன. இங்கு உலகிலேயே சிறந்த தேயிலை உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அந்தவகையிலும் கொழுக்கு மலை, குரங்கணி, டாப் ஸ்டேஷன் பகுதிகள் பிரபலமானவை.

ஆண்டு முழுவதும் குளிர்ச்சி தரும் ‘கொழுக்குமலை’ - மெல்லினம் தமிழ்

பெரும்பாலும் அரியப்படாத இந்த கொழுக்குமலை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் போடிநாயக்கனூர் சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட பகுதி தான். இப்பகுதியைச் சுற்றிலும் போடி, குரங்கணி, தேனி மாவட்ட பள்ளத்தாக்குப் பகுதிகளையும், கொட்டகுடி, குரங்கணி, டாப் ஸ்டேஷன், சென்ட்ரல் ஸ்டேஷன் என பசுமையான பகுதிகளையும் பார்த்து ரசிக்கலாம். கட்டிட நெரிசல், வாகன இரைச்சல், வேலைப் பழு இதில் இருந்து தப்பிச்சு மன நிம்மதியை தேடி போறதா இருந்தா இங்க போங்க. உங்களுக்கு இந்த இடம் கண்டிப்பாக நிம்மதியையும், புத்துணர்ச்சியையும் கொடுக்கும்.

“தமிழகம் மற்றும் கேரளத்திற்கு இடையே இரு எல்லைகளையும இணைத்தவாறு உள்ள கொழுக்குமலை தமிழ், மலையாள சினிமாவில் முக்கிய ஷூட்டிங் ஸ்பாட்டாக திகழ்கிறது. நீங்கள் மைனா படம் பார்த்திருந்தீர்கள் என்றால் தெரிந்து கொள்ளுங்கள், அந்தப் படம் முழுவதும் இங்கேதான் எடுக்கப்பட்டது என்று. இரு மாநில எல்லைப் பகுதி என்பதால் இரு மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் வருவார்கள்.”


ஆண்டு முழுவதும் குளிர்ச்சி தரும் ‘கொழுக்குமலை’ - மெல்லினம் தமிழ்

பயணத்திட்டம்:

கொழுக்குமலைக்குச் செல்லும் திட்டத்தோடு வருகிறவர்கள் அதிகாலை 4.30 – 5.00 மணிக்கெல்லாம் சூர்ய நெல்லியை அடைந்து விட வேண்டும். அப்படி இல்லையென்றால் முந்தைய நாளே சூர்யநெல்லியில் வந்து தங்கிவிடாலாம்.சூர்யநெல்லியில் அனைத்து விதமானவர்களுக்கும் தங்கும் விடுதி இருக்கிறது. தனிப்பயணிகளுக்கு குறைந்த வாடகையிலான விடுதிகளும் உண்டு.

கொழுக்குமலையில் இரண்டு கேம்பிங் இடங்கள் உண்டு. நபர் ஒன்றுக்கு 2,500 ரூபாய் வீதம் வசூல் செய்து கொழுக்குமலைக்குக் கூட்டி வந்துவிடுவார்கள். அங்கு டெண்ட் போட்டு ஓர் இரவு தங்கலாம். இரவு உணவு மற்றும் அடுத்த நாள் காலைக்கான உணவு வழங்கப்படும். காலையில் கொழுக்கு மலையேற்றத்துக்கு கூட்டிச் செல்லப்படுவார்கள். ஆன்லைன் மூலம் இதைப் பதிவு செய்துகொள்ளலாம்.

குரங்கணி தீ விபத்துக்குப் பிறகு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. கொழுக்குமலையை யொட்டியிருக்கும் மீசைப்புலி மலைக்குச் செல்லும் பயணத்தை கேரள சுற்றுலாத்துறையே ஒருங்கிணைக்கிறது. முன்கூட்டியே பதிவு செய்து பயணிக்கலாம்.