காலங்களில் அவள் வசந்தம் திரை விமர்சனம்
நடிகர்கள் : கௌஷிக்ராம், அஞ்சலி, ஹெரோசினி, விக்னேஷ் மற்றும் பலர்
இயக்கம் : ராகவ் மிர்தத்
இசை : ஹரி எஸ்.ஆர்
ஒளிப்பதிவு : கோபி
தயாரிப்பு : அறம் புரடக்ஷன்
ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்திட்டு, படங்கள பார்த்து திரியும் ஒரு இளைஞன் ஷியம் (கௌஷிக்ராம்). திரைப்படத்தில் வருகிற மாதிரி நாமும் காதல் செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு பெண்களைப் பார்த்து பார்த்து காதலிக்கும் 90 ளீ கிட்ஸ். திடீரென அவர் வீட்டுக்கு விருந்தாளியாக வரும் ஸ்டர்ட் அப் நிறுவனம் நடத்தும் ராதே(அஞ்சலி), அவனுடைய தத்தி கேரக்டரைப பார்த்து, நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா? என வெளிப்படையாக கேட்க, பழம் நழுவி பால்ல விழுந்த மாதிரி நாயகன் ஓகே சொல்கிறார். எதிரும் புதிருமாக இருக்கும் இருவரும் எல்லா காலங்களிலும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்களா? என்பதுதான் மீதிக் கதை.
அறிமுக நடிகர் கௌசிக்ராம் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். அதாவது அறிமுகம் என்று தெரியாத அளவு(க்கு கலக்குகிறார். நாயகி அஞ்சலி. டாணாக்கரன் படத்தை விட இந்தப் படத்தில் நடிப்புக்கு ஸ்கோப் அதிகம். அதை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். அதிலும் ரொமான்டிக் சீன் செம என்று சொல்லும் அளவுக்கு அழகாக இருக்கிறது. இன்னொரு நாயகி அனுராதா(ஹெரோசினி), ஒரு நான்கு சீன் வந்தாலும், படம் முழுவதும் வந்தமாதிரியான ஒரு உணர்வைத் தருகிறார். அதேமாதிரி, நாயகர்களுக்கு வரும் சப்போர்ட்டிவ் கேரக்டர் விக்னேஷ், அனிதா சம்பத் அளவாக நடித்திருக்கிறார்கள்.
திரைக்கதை எழுதி இயக்கிய ராகவ் மிர்தத் முதல் படத்தில் கவனம் பெறுகிறார். ஆனால், திரைகதையில் இருந்த சுவரஸ்யம் படத்தை கடத்தும்போது கொஞ்சம் சுணக்கம் ஏற்படுகிறது. வசனம் சும்மா சொல்லக்கூடாது காலத்திற்கேற்ற பஞ்ச் வசனம்.இந்த மாதிரியான படத்திற்கு இசை சிறப்பாக இருந்திருக்கவேண்டும். ஆனால், சுமார் ரகம்தான். ஒளிப்பதிவு சூப்பர். அதேமாதிரி, மொத்தத்தில் 90 கிட்ஸ், 2கே கிட்ஸ் இருவரும் ரசிக்கூடிய படம்தான். கிளைமக்ஸ் கொஞ்சம் மெனக்கிட்டிருந்தால் வேற ஓரு ஜானர் படமாக இருந்திருக்கும்.